பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு சிந்து, பிரனாய்

Posted By: Staff

பாரிஸ்: சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து, பிரனாய் முன்னேறினர்.

சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன.

Sindhu for another title

இதில் நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டங்களில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீனாவின் சென் யூபெய்யை சந்தித்தார். 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையை வென்று, அரை இறுதிக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் போட்டிகளின் அரை இறுதிக்கு முதல் முறையாக சிந்து முன்னேறியுள்ளார். கடந்த வாரம் நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் முதல் சுற்றில் சீன வீராங்கனை சென் யூபெயையிடம் சிந்து தோல்வியடைந்தார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம், இதுவரை, இருவரும் சந்தி்த்த 5 ஆட்டங்களில் 3-2 என்ற கணக்கில் சிந்து அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய், தென் கொரியாவின் ஜியோன் ஹியாக் ஜின்னை 21-16, 21-16

என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Story first published: Saturday, October 28, 2017, 16:27 [IST]
Other articles published on Oct 28, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற