சாம்பியன் சிந்துவுக்கு சீன வீராங்கனை அதிர்ச்சி வைத்தியம்!

Posted By: Staff

புசோவ்: சூப்பர் சீரியஸ் போட்டியான சீன ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் நடப்புச் சாம்பியனான பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. தற்போது சீன ஓபன் போட்டிகள் தற்போது, சீனாவின் புசோவ் நகரில் நடக்கிறது.

Sindhu lost China Open

காயம் காரணமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் பங்கேற்கவில்லை. சாய்னா நெஹ்வால்,மற்றும் எச்.எஸ். பிரனாய் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினர்.

இந்த ஆண்டில் சூப்பர் சீரியஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 10 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது. சீன ஓபன் போட்டியில், 2014ல் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் பிரிவிலும், சாய்னா நெஹ்வால் மகளிர் பிரிவிலும் பட்டம் வென்றனர். சீன ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நடப்பு சாம்பியனான பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டும் அவர் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சிந்து, சீனாவின் காவோ பாங்க்ஜியை காலிறுதியில் நேற்று சந்தித்தார். பரபரப்பாக ஆட்டம் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருவதால், சிந்துவிடம் சோர்வு காணப்பட்டது. அதை சீன வீராங்கனை பயன்படுத்திக் கொண்டு, சிந்துவை தவறுகள் செய்ய வைத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம், 38 நிமிடங்களிலேயே முடிந்தது. பாங்க்ஜி 21-11, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம், சீன ஓபன் போட்டிகளில் இருந்து அனைத்து இந்திய வீரர்களும் வெளியேறிவிட்டனர்.

அடுத்ததாக, வரும் 21ம் தேதி ஹாங்காங் ஓபன் போட்டிகள் துவங்குகின்றன. கடந்த முறை பைனலில் சிந்து விளையாடினார்

Story first published: Saturday, November 18, 2017, 12:45 [IST]
Other articles published on Nov 18, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற