சபாஷ், சரியானப் போட்டி - சாய்னா – பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் – பிரனாய் மோதல்

Posted By: Staff

மும்பை: இந்திய பாட்மின்டன் சூப்பர் ஸ்டார்களான, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நெஹ்வாலும், பி.வி. சிந்துவும், தேசிய சீனியர் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நேரிடையாக மோத உள்ளனர்.

82வது தேசிய சீனியர் பாட்மின்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சாய்னா நெஹ்வாலும், பி.வி. சிந்துவும் கலந்து கொண்டனர். இருவரும் கலந்து கொள்வதாக அறிவித்த உடனேயே, பைனலில் இவ்விருவருக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

சாய்னா உச்சத்தில் இருந்தபோது களமிறங்கிய சிந்து தற்போது உச்சத்தில் உள்ளார். உலகத் தரவரிசையில், சாய்னா 11வது இடத்திலும், பி.வி. சிந்து 2வது இடத்திலும் உள்ளனர்.

அரை இறுதியில் போராடிய சிந்து

அரை இறுதியில் போராடிய சிந்து

ஆனால் நேற்று நடந்த அரை இறுதியில் சாய்னா நெஹ்வால், 21-11, 21-10 என்ற கணக்கில் அனுரா பிரபுதேசாவை வென்றார். அதே நேரத்தில் பி.வி. சிந்து, 17-21, 21-15, 21-11 என்ற செட்களில் ரித்விகா ஷிவாணியை போராடி வென்றார்.

இரண்டு முறை நேரடி மோதல்

இரண்டு முறை நேரடி மோதல்

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தியவர் சாய்னா. அதே நேரத்தில் ரியா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ஆச்சரியப்படுத்தவர் சிந்து. இருவரும் கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை வென்றவர்கள். இருவரும் இதுவரை சர்வதேசப் போட்டிகளில் இரண்டு முறை மோதியுள்ளனர். 2014 சையது மோடி சர்வதேசப் போட்டியில் சாய்னா வென்றார். 2014ல் நடந்த இந்திய சூப்பர் சீரியர்ஸ் போட்டியில் சிந்து வென்றார்.

பைனலில் ஸ்ரீகாந்த் – பிரனாய்

பைனலில் ஸ்ரீகாந்த் – பிரனாய்

ஆடவர் பிரிவில், உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், பைனலுக்கு முன்னேறினார். பைனலில் அவர் மோத உள்ளது எச்.எஸ்.பிரனாய். சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் அரை இறுதியில் இருவரும் மோதினர். இறுதியில் ஸ்ரீகாந்த் வென்று, இந்தாண்டில் நான்காவது சூப்பர் சீரியஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.

நான்கில் மூன்று முறை வென்ற ஸ்ரீகாந்த்

நான்கில் மூன்று முறை வென்ற ஸ்ரீகாந்த்

அரை இறுதியில் பிரனாய் 21-14, 21-17 என்ற செட்களில் சுபாங்கர் தேவை வென்றார் மற்றொரு அரை இறுதியில் ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற செட்களில் லக் ஷயா சென்னை வென்றார். ஸ்ரீகாந்த் மற்றும் பிரனாய் சர்வதேச போட்டிகளில் நான்கு முறை சந்தித்துள்ளனர். அதில் கடைசி மூன்று ஆட்டங்களில் ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

Story first published: Wednesday, November 8, 2017, 10:16 [IST]
Other articles published on Nov 8, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற