சிந்து, ஸ்ரீகாந்த் வென்றனர்... ஆனால் இந்தியாவுக்கு தோல்வி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

அலோர் செட்டார்: மலேசியாவில் நடக்கும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கள் காலிறுதியில் தோல்வியடைந்தன. ஸ்டார் பிளேயரான சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் வென்றபோதும், மற்றவர்கள் சோபிக்காததால் இந்திய அணிகள் தோல்வி அடைந்தது.

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவில் நடந்து வருகிறது. இதில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கால் இறுதியில் நேற்று விளையாடின.

ஆடவர் பிரிவில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதலில் நடந்த ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 21-16, 21-7 என்ற செட்களில் சீனாவின் ஷி யூகியை வென்றார். முதல் கேமில் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த், அடுத்த கேமில் சமாளித்து வென்றார். மூன்றாவது கேமில் அதிரடி காட்டினார்.

வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்

வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்

வலு குறைந்த சீன அணியை வெல்வதற்கு சுலபமான வாய்ப்பு இருந்தும், இந்திய அணி அதை தவறவிட்டது. அடுத்து இரட்டையர் பிரிவில் சாத்விக்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பி சாய் பிரனீத், ஒற்றையரில் போராடி தோல்வியடைந்தார்.

இரட்டையர் ஜோடி தோல்வி

இரட்டையர் ஜோடி தோல்வி

அதற்கடுத்த இரட்டையர் ஆட்டத்தில் பி. சுமீத் ரெட்டி, மனு ஆத்ரி ஜோடியும் தோல்வியடைந்தது. இதில் தோல்வியடைந்தாலும், அடுத்து நடக்க உள்ள தாமஸ் கோப்பை போட்டிக்கு இந்திய ஆடவர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

சிந்துவுக்கு எதிர்பார்த்த வெற்றி

சிந்துவுக்கு எதிர்பார்த்த வெற்றி

முன்னதாக மகளிர் பிரிவிலும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் கால் இறுதியில் தோல்வியடைந்தது.

எதிர்பார்க்கப்பட்டதை போலவே, முதலில் நடந்த ஒற்றையரில் பிவி சிந்து, 21-13, 24-22 என்ற கணக்கில் பிட்ரியானி பிட்ரியானியை வென்றார். அதற்கடுத்த இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. பின்னர் நடந்த ஒற்றையரில் ஸ்ரீ கிருஷ்ண பிரியாவும் தோல்வியடைந்தார்.

சிந்து ஜோடி தோல்வி

சிந்து ஜோடி தோல்வி

அதையடுத்து பிவி சிந்து, சன்யோகிதா கோர்பாடே ஜோடி இரட்டையர் பிரிவில் களமிறங்கியது. ஆனால், இந்த ஜோடியும் தோல்வியடைந்தது. அதையடுத்து 3-1 என்ற கணக்கில் இந்தோனேஷியா வென்றது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், மே மாதம் நடக்க ஊபர் கோப்பை போட்டிக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

English summary
Indian teams out in quarter finals of Asian badminton championship
Story first published: Saturday, February 10, 2018, 11:11 [IST]
Other articles published on Feb 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற