For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டென்மார்க் ஓபனுக்கு அடுத்து பிரெஞ்ச் ஓபனுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் தயார்!

By Staff

டெல்லி: பாட்மின்டன் போட்டிகளில் இந்த ஆண்டு, இந்தியாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. டென்மார்க் ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு ஆண்டுதோறும், 13 சூப்பர் சீரியஸ் போட்டிகளை நடத்துகிறது. ஆல் இங்கிலாந்து, இந்தியா சூப்பர் சீரியஸ் என துவங்கி, தற்போது டென்மார்க் ஓபன் போட்டி முடிந்துள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், அக். 24 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

சீனா, ஹாங்காங், சூப்பர் சீரிஸ்

சீனா, ஹாங்காங், சூப்பர் சீரிஸ்

அதன் பிறகு நவம்பர் 14 முதல் 19 வரை சீன ஓபன் போட்டிகளும், நவம்பர் 21 முதல் 26 வரை ஹாங்காங் ஓபன் போட்டிகளும், கடைசியில், டிசம்பர் 13 முதல் 17 வரை சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டிகளும் நடக்க உள்ளன.

இந்தியாவுக்கு 6 பட்டம்

இந்தியாவுக்கு 6 பட்டம்

இதுவரை நடந்துள்ள 9 சூப்பர் சீரியஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு 6 பட்டங்கள் கிடைத்துள்ளன.

மூன்றாவது பட்டம் வென்றார்

மூன்றாவது பட்டம் வென்றார்

இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து, சிங்கப்பூர் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் பி. சாய் பிரனீத், இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளனர்.

அதிக பட்டங்களில் நான்காவது இடம்

அதிக பட்டங்களில் நான்காவது இடம்

அதிக பட்டங்கள் வென்ற நாடுகளில் சீனா (11 பட்டங்கள்), இந்தோனேசியா (7 பட்டங்கள்), ஜப்பானுக்கு (7 பட்டங்கள்) அடுத்ததாக நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

Story first published: Monday, October 23, 2017, 13:39 [IST]
Other articles published on Oct 23, 2017
English summary
Srikanth wins Denmark Open, third title in this year
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X