உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்..!

Posted By: Staff

டெல்லி: தொடர்ந்து நான்கு சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் பட்டங்களை வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு, வீரர்களுக்கான புதிய தரவரிசையைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், 8வது இடத்தில் இருந்த கிடாம்பி ஸ்ரீகாந்த், 2வது இடத்துக்கு முன்னேறினார். உலகத் தரவரிசையில் அவர் பெறும் மிகவும் அதிகபட்ச இடம் இதுவாகும்

ஒரே ஆண்டில் நான்கு பட்டம்

ஒரே ஆண்டில் நான்கு பட்டம்

இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள சூப்பர் சீரியர்ஸ் பாட்மின்டன் போட்டிகளில், இந்தோனேசியன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், டென்மார்க் ஓபன் மற்றும் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.

இதுதான் அதிகபட்சம்

இதுதான் அதிகபட்சம்

அதையடுத்து, உலகத் தரவரிசையில் மளமளவென்று முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன், 2015 ஆகஸ்டில், உலகத் தரவரிசையில், அவர் மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.

சபாஷ் பிரனாய்

சபாஷ் பிரனாய்

சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியின் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்திடம் தோல்வியடைந்த இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 11வது இடத்துக்கு முன்னேறினார்.

மற்றவர்கள் நிலைமை என்ன?

மற்றவர்கள் நிலைமை என்ன?

அதே நேரத்தில் சாய் பிரனீத் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அஜய் ஜெயராமன் 23ல் இருந்து 22வது இடத்துக்கு முன்னேறினார். சமீர் வர்மா 18வது இடத்தையும், சவுரப் வர்மா 41வதுஇடத்தையும் பிடித்தனர். காமன்வெல்த் சாம்பியனான பி. கஷ்யப், 45வது இடத்தில் உள்ளார்.

சிந்து தொடர்நது 2வது இடம்

சிந்து தொடர்நது 2வது இடம்

மகளிர் பிரிவில் பி.வி.சிந்து தொடர்ந்து 2வது இடத்திலும், சாய்னா நெஹ்வால், 11வது இடத்திலும் உள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரர்களை இந்தியா பெற்றுள்ளது முதல் முறையாகும்.

Story first published: Saturday, November 4, 2017, 14:41 [IST]
Other articles published on Nov 4, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற