பதக்க நம்பிக்கை உடைந்தது.. ஆண்கள் பேட்மிண்டன்.. சாய் பிரணீத்தின் கடைசி போராட்டமும் தோல்வி.. எப்படி?

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான டேபிள் டென்னிஸ் வீரர் சாய் ப்ரணீத் க்ரூப் பிரிவிலேயே வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பதக்கங்களை குவித்து வரும் சூழலில் இன்றும் இந்தியாவுக்கு சற்று ஏமாற்றங்களே இருந்து வருகிறது.

இன்று நடைபெற்ற வில்வித்தை, குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், டேபிள் டென்னிஸ் பிரிவில் சாய் ப்ரணீத் ஏமாற்றியுள்ளார்.

முதல் தோல்வி

முதல் தோல்வி

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 3 சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு, காலிறுதிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் இந்தியாவை சேர்ந்த சாய் பிரணீத் கடந்த 24ம் தேதியன்றே தனது முதல் சுற்றில் தோல்வியடைந்தார். இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனை எதிர்கொண்டிருந்த அவர், 21-17, 21-15 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்நிலையில் இன்று 2வது சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நெதர்லாந்தின் கால்ஜாவ் என்ற வீரரை சாய் பிரணீத் எதிர்கொண்டார். இந்த போட்டியில் சாய் பிரணீத் தொடக்கத்தில் சரிவை சந்தித்த போதிலும், அடுத்தடுத்து பாய்ண்ட்ஸ்களை இழந்து தடுமாறினார். இதனால் முதல் செட்டில் 14 - 21 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரர் முன்னிலை பெற்றார்.

 பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

2வது சுற்றிலும் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர் ஆதிக்கம் செலுத்தினார். சாய் பிரணீத் எவ்வளவு போராடியும் அவரால் முன்னிலை வகிக்க முடியவில்லை. இறுதியில் 14 -21, 14 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். 3 போட்டிகள் கொண்ட குரூப் சுற்று போட்டிகளில் தொடர்ச்சியாக 2ல் தோல்வியை பெற்றதால் சாய் பிரணீத்தின் பதக்க கனவு பொய்யானது.

 பிரணீத்தின் நம்பிக்கை

பிரணீத்தின் நம்பிக்கை

இந்திய வீரர் சாய் பிரணீத் கடந்த 2010 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2016 தெற்காசிய போட்டிகளின் அணி பிரிவில் தங்கம், 2016 மற்றும் 2020 ஆசிய சாம்பியன்ஷிப்பின் அணி பிரிவில் வெண்கலம், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் என பதக்கங்களை குவித்தவர் ஆவார். இது இவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக களமிறங்குவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In Tokyo olympic Badminton Men's Singles Sai Praneeth second consecutive defeat in the group stage, Praneeth's campaign is over.
Story first published: Wednesday, July 28, 2021, 16:10 [IST]
Other articles published on Jul 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X