For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாக்சிங்கில் எதிராளியின் காதை கிழித்த மெக்சிகோ வீரர்.. இது கெட்ட ஆட்டம்!

அமெரிக்காவில் நடந்த பாக்சிங் போட்டி ஒன்றில் மெக்சிகோ வீரர் எதிரணி வீரரின் காதை அடித்து கிழித்து இருக்கிறார்.

By Shyamsundar

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த பாக்சிங் போட்டி ஒன்றில் மெக்சிகோ வீரர் ஒருவர் எதிரணி வீரரின் காதை அடித்து கிழித்து இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்தை சேர்ந்த அந்த வீரரின் காது கிழிந்து அப்படியே வெளியே வந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் அடிக்கடி குத்துச்சண்டை போட்டிகள் நடக்கும். இந்த போட்டிகள் மிகவும் உக்கிரமாக படத்தில் கட்டுவதை விட கொடூரமாக இருக்கும்.

A boxer teared opponent ear in real time boxing match

இந்த நிலையில் நேற்றிரவு லாஸ் வேகாஸில் இதேபோல முக்கிய குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் மெக்சிகோவும் இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதியது. மெக்சிகோவை சேர்ந்த பிரான்சிகோ வர்காஸ் என்று வீரர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித்தை எதிர்கொண்டார்.

இந்த போட்டி உலக சாம்பியனுக்காக நடைபெற்ற மிக முக்கியமான போட்டியாகும். இதில் மெக்சிகோவை சேர்ந்த பிரான்சிகோ வர்காஸ் தொடக்கத்தில் இருந்து உக்கிரமாக ஆடினார்.

அவர் தாக்குதல் மிகவும் வலுவாக இருந்தது. இந்த நிலையில் கடைசி சுற்றிற்கு முந்தைய சுற்றில் பிரான்சிகோ வர்காஸ் மிகவும் வேகமாக செயல்பட்டார். அவருடைய குத்து ஒன்று ஸ்டீபன் ஸ்மித் காதை பதம் பார்த்தது.

இதனால் அந்த இடத்திலேயே ஸ்டீபன் ஸ்மித் காது பிய்ந்து தொங்கியது. ஆனாலும் அதே நிலையுடன் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த ரவுண்டிற்கு தயாரானார். ஆனால் ரெப்ரி அவரை விளையாட விடவில்லை. இதனால் போட்டி முடிவடைந்தது. மேலும் பிரான்சிகோ வர்காஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Story first published: Sunday, December 10, 2017, 18:47 [IST]
Other articles published on Dec 10, 2017
English summary
A boxer named Francisco from Mexico teared opponent Engaland's Stephen Smith's ear in real time boxing match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X