For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மகனுக்கு முன்னுரிமை, ஸ்காலர்ஷிப் நிறுத்தம்.. இளம் சாதனை கிரிக்கெட் வீரரின் சோகம்

By Veera Kumar

மும்பை: கடந்த ஆண்டில் கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பிய பெயர் என்றால் அது பிரணாவ் தனவாடே. பள்ளிகள் அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில், 1009 ரன்கள் குவித்தவர் இவர்.

பிரணாவ் தனவாடே தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். அவரால் மகனின் கிரிக்கெட் பயிற்சிகளுக்கான செலவீனங்களை ஈடுகட்ட முடியவில்லை. இதனிடையே, மும்பை கிரிக்கெட் சங்கம், பிரணாவ் தனவாடேக்கு ரூ.10ஆயிரம் ரொக்கப் பணத்தை ஸ்காலர்ஷிப்பாக வழங்க ஆரம்பித்தது.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக ஸ்காலர்ஷிப் வருவது நின்றுவிட்டது. எப்போது மீண்டும் அவருக்கு ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்கப்பட தொடங்கும் என்பதில் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு இன்னும் தெளிவு இல்லை.

ஆய்வு நடத்துவோம்

ஆய்வு நடத்துவோம்

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க துணை தலைவர் வினோத் தேஷ்பாண்டே கூறுகையில், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வது எங்கள் வழக்கம். ஸ்காலர்ஷிப்பை தொடர வேண்டுமானால் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

ஆட்டம் மேம்படனுமே

ஆட்டம் மேம்படனுமே

கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கான ஆட்டத்தை பிரணாவ் தனவாடே வெளிப்படுத்தவில்லை. அதிலும் கடந்த ஆறுமாதங்களாக அப்படி எதுவுமே இல்லை. எனவேதான் ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்டோர் கோடை கேம்ப் ஆட்டத்தொடரில் பிரணாவ் தனவாடே 70 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் பிரணாவ் தனவாடே செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவர் சிறப்பாக ஆடினால், ஸ்காலர்ஷிப் திரும்பவும் வழங்கப்படும் என்றார்.

இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து பயணம்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான, வினோத் தேஷ்பாண்டே இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு தயாராகி வருகிறார். அங்கு நடைபெறும் ஃப்ரெண்ட்லி சுற்றுப் பயணத்தில் அவர் பங்கேற்கிறார். முன்னதாக தனது ஆட்ட நேர்த்தியை மேம்படுத்திக்கொள்ள தீவிர பயிற்சிகளுக்கு உள்ளாகினார் அவர்.

முக்கியமான தொடர்

முக்கியமான தொடர்

இதுகுறித்து வினோத் தேஷ்பாண்டே தந்தை, பிரசாந்த் கூறுகையில், "திலிப் வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமிதான் முழு செலவையும் ஏற்று, எனது மகனை இங்கிலாந்து அழைத்துச் செல்கிறது. இதில் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கிறேன். அப்படி ஆடினால்தான் அவரால் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டி தேர்வின்போது அணியில் இடம் பிடிக்க முடியும். ஸ்காலர்ஷிப்பையும் திரும்ப பெற முடியும்" என்றார்,

சச்சின் மகன்

கடந்த வருடம், 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு பிராந்திய கிரிக்கெட் தொடருக்கான அணியில், வினோத் தேஷ்பாண்டேக்கு இடம் கிடைக்கவில்லை. அதேநேரம், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்தது. இது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், வினோத் தேஷ்பாண்டேவுக்கு ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது. உடனே, சச்சின் மீது உங்கள் சந்தேகப்பார்வையை திருப்ப வேண்டாம். கிரிக்கெட்டின் ஜென்டில்மேனான சச்சின், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறுதான் நடப்பார் என்பதே அவரின் ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திறமையை காட்டி தேஷ்பாண்டே முன்னுக்கு வர வாழ்த்துவதே நம்மால் முடிந்தது.

Story first published: Thursday, July 6, 2017, 18:00 [IST]
Other articles published on Jul 6, 2017
Read in English: Fiancial crisis for Pranav
English summary
After his sensational 1009 in a school level tournament last year, the star seemed to have faded on Pranav Dhanawade. The Rs 10,000 scholarship that the Mumbai Cricket Association was giving him has stopped coming in for the last six months. The MCA still has not decided when to resume the grant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X