For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி வெற்றிக்காக ஷமியின் வீட்டில் குர்ஆன் ஓதும் 11 மவ்லவிகள்: மசூதிகளில் சிறப்பு தொழுகை

By Siva

லக்னோ: இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் வீடு மற்றும் கிராமத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பந்துவீச்சாளர் முகமது ஷமி. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த கிராமத்தில் சுவராஸ்யமான விஷயம் நடந்துள்ளது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இந்திய அணி வெற்றி பெற வேண்டி ஷமியின் வீட்டில் 11 மவ்லவிகள் குர்ஆன் ஓதி வருகிறார்கள். மேலும் கிரமாத்தில் உள்ள 4 மசூதிகளிலும் டோணி தலைமையிலான அணியின் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.

11 வீரர்கள்

11 வீரர்கள்

இந்திய அணியின் 11 வீரர்களுக்காக 11 மவ்லவிகள் குர்ஆன் ஓதி பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று ஷமியின் தந்தை தவ்சீப் தெரிவித்துள்ளார்.

மசூதிகள்

மசூதிகள்

ஷமி மட்டும் அல்ல இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் கிராமத்தினர்..

விருந்து

விருந்து

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவ்சீப்.

பாட்டி

பாட்டி

ஷமியின் பாட்டி புதன்கிழமை முழுவதும் தொழுது இந்திய அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

Story first published: Thursday, March 26, 2015, 13:08 [IST]
Other articles published on Mar 26, 2015
English summary
11 Maulvis are reading Quran in cricketer Mohammad Shami's house, while special prayers are going on in the bowler's village in UP.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X