யப்பா... என்ன மாதிரியான வீரர்... சான்சே இல்ல... விராட் கோலியை பாராட்டிய மும்பை அணி வீரர்!

டெல்லி : ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அந்த அணியின் பல வெற்றி சந்தர்ப்பங்களில் கைகொடுத்தவர் சூர்யகுமார் யாதவ்.

அவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதற்கு விராட் கோலியே காரணம் என பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 12,000 ரன்களை அதிவேகமாக கடந்த சாதனைக்கு சூர்யகுமார் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸி தொடரில் இடம்பெறவில்லை

ஆஸி தொடரில் இடம்பெறவில்லை

நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல்வேறு வெற்றி தருணங்களுக்கு சொந்தக்காரராக விளங்கினார் சூர்யகுமார் யாதவ். அவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இடம்பெறவில்லை.

சர்ச்சைகளை ஏற்படுத்திய தேர்வு

சர்ச்சைகளை ஏற்படுத்திய தேர்வு

காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடர்களில் ரோகித் சர்மாவின் பெயர் முதலில் இடம்பெறவில்லை. மாறாக இரண்டாவதாக வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் டெஸ்ட் தொடரில் அவரது பெயர் இடம்பெற்றது. அவரை காட்டிலும் சூர்யாவின் பெயர் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

கோலியே காரணம் என குற்றச்சாட்டு

கோலியே காரணம் என குற்றச்சாட்டு

மூத்த வீரர்கள் பலர் சூர்யாவிற்கு ஆதரவாக பேசினர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெறாததற்கு கேப்டன் விராட் கோலியே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.

சூர்யகுமார் யாதவ் பாராட்டு

சூர்யகுமார் யாதவ் பாராட்டு

இந்நிலையில் இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிவேக 12,000 ரன்கள் சாதனையை கேப்டன் விராட் கோலி மேற்கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சூர்யகுமார் யாதவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன மாதிரியான வீரர் என்று அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாததற்கு கோலியே காரணம் என்று கூறப்படும் நிலையில், அவரது சாதனைக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளது பல்வேறு தரப்பினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Surya Kumar Yadav hails Virat Kohli for his Fastest to reach another Milestone
Story first published: Wednesday, December 2, 2020, 14:41 [IST]
Other articles published on Dec 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X