For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BBL டி20 லீக் - 19 வயது வீரர் செய்த சம்பவம்.. 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் அணி

பெர்த் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் பெர்த் ஸ்கார்ட்சர்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் அணியும், பெர்த் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிஸபேன் ஹீட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் அணியில் ஜோஸ் பிரவுன் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் சாம் மற்றும் நாதன் ஆகியோர் கொஞ்சம் பொறு காட்டி முறையே 25 ரன்கள் மற்றும் 34 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஜிம்மி மட்டும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு

176 ரன்கள் இலக்கு

176 ரன்கள் இலக்கு

நடுவரிசையில் களமிறங்கிய மேக்ஸ் பிராண்ட் 14 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு சாம் 21 ரன்கள் எடுத்து துணை நிற்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் பிரிஸ்பேன் அணி 175 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

 முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டிபன் 21 ரன்களிலும், கேம்ரான் பிரான்கிராப்ட் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆரோன் ஹார்ட்லி 17 ரன்களிலும், ஜாஸ் இங்லிஸ் 26 ரன்கள் எடுத்தன. அந்த அணியில் ஆஸ்டன் டர்னர் மட்டும் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

19 வயது வீரர்

19 வயது வீரர்

ஒரு கட்டத்தில் பெர்த் அணி வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத படி 19 வயது வீரர் கூப்பர் ஒரு சம்பவம் செய்தார். கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. அதுவும் பவுண்டரி லைன்கள் பெரியதாக இருக்கும் பெர்த்தில் சாத்தியமே இல்லை என்று பெர்த் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர்.

18 ரன்கள்

18 ரன்கள்

இப்படி ஒரு சமயத்தில் தான் ஹீரோ உருவார்கள் என்பார்கள். அப்படி தான் கூப்பர் தைரியமாக பந்தை பளார் என்று தூக்கி சிக்சர்களுக்கு அடித்தார். 18வது ஓவரில் கூப்பர் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி, டபுள்ஸ் என 18 ரன்கள் அடித்தார். இதன் மூலம் பந்துக்கும், ரன்களுக்கு உள்ள வித்தியாசம் குறைந்து கொண்டே இருந்தது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

இதே போன்று 19வது ஓவரில் பிரிஸ்பேன் வீரர்கள் பவுண்டரியை கட்டுப்படுத்த, கூப்பர், ஹாப்ஸ் ஜோடி டபுள்ஸ் ஓடியே 10 ரன்கள் எடுத்துவிட்டார்கள். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட ஹாப்ஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, 3 பந்துகள் எஞ்சிய நிலையில், பெர்த் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5வது முறையாக பெர்த் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெர் அணி கடைசி 15 பந்தில் 41 ரன்கள் சேர்த்தது

Story first published: Saturday, February 4, 2023, 21:08 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
19 year old cooper master class helps Perth scorchers won the 5th BBL Title BBL டி20 லீக் - 19 வயது வீரர் செய்த சம்பவம்.. 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X