For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மே.இ. தீவுகளுக்கு எதிராக ஓப்பனிங்கில் களமிறங்கப்போகும் இந்திய பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

By Veera Kumar

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தவானுடன் இணைந்து ரஹானே களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங்கில் களமிறங்கி வந்த ரோகித் ஷர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் ரஹானே களமிறங்குவார் என கேப்டன் கோஹ்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோஹ்லி கூறியதாவது:

ரஹானே

ரஹானே

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரஹானே மாற்று தொடக்க வீரராக இருந்தார். மே.இ.தீவுகளுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டியிலும் ஷிகர் தவானுடன் ரஹானே தொடர்ந்து வீரராக களம் இறங்குவார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்

ரஹானே மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வர கூடியவர். ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடியதை பார்த்து இருக்கிறேன். மே.இ.தீவுகள் மண்ணில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று முதல் ஒருநாள் போட்டி

இன்று முதல் ஒருநாள் போட்டி

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இளம் வீரருக்கு வாய்ப்பு

இளம் வீரருக்கு வாய்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடிய தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இளம் வீரர் ரிஷாப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Friday, June 23, 2017, 17:28 [IST]
Other articles published on Jun 23, 2017
English summary
With Rohit Sharma rested for the West Indies limited-over series, India captain Virat Kohli said that Ajinkya Rahane will open alongside Shikhar Dhawan in the upcoming five-match ODI series starting on Friday (June 23).
 Rohit, who opened for India along with Shikhar Dhawan in the just-concluded Champions Trophy in the United Kingdom, has been rested for the West Indies tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X