For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிலெய்ட் மழையில் அசத்திய ஆஸி: 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்கள் குவிப்பு! சோகத்தில் இந்தியா!

By Mathi

அடிலெய்டு: இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்களைக் குவித்து இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா. இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட நிலையிலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தும் கிளார்க்கும் சதங்களைக் கடந்தனர். ஸ்மித் 162 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மறைவைத் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக புதிய வீரர் கரன் சர்மா சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரராக ரோஜர்ஸுடன் களமிறங்கிய வார்னர், ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நாள் போட்டியைப் போல பவுண்டரிகளில் ரன் சேர்த்தார் வார்னர்.

பவுண்டரிகள் தாரை வார்ப்பு

பவுண்டரிகள் தாரை வார்ப்பு

வருண் ஆரோன் தனது முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரிகளையும் முகமது ஷமி 3 பவுண்டரிகளையும் வாரிக் கொடுத்தனர்.

அசத்திய வார்னர்

அசத்திய வார்னர்

மிகவும் நிதானமாக ஆடிவந்த ரோஜர்ஸ் 9 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் அதிரடி காட்டிய வார்னர் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதத்தைத் தாண்டினார். அதே நேரத்தில் அவருடன் இணைந்த ஷேன் வாட்சன், 12 ரன்களில் அவுட் ஆனார்.

10வது சத்தை எட்டினார்

10வது சத்தை எட்டினார்

களத்தில் இருந்த வார்னருடன் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 106 பந்துகளில் வார்னர் சதத்தை தொட்டார். இது டெஸ்ட் போட்டியில் வார்னரின் 10-வது சதமாகும். மறுமுனையில் கிளார்க் 69 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

முதல் விக்கெட் எடுத்த கரண் சர்மா

முதல் விக்கெட் எடுத்த கரண் சர்மா

ஆனால் 60 ரன்கள் எடுத்திருந்த கிளார்க் முதுகில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்தும் விளையாடவில்லை. வார்னர் 145 ரன்கள் எடுத்த நிலையில் கரண் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். கரண் சர்மாவின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் இது.

354 ரன்கள் குவிப்பு

354 ரன்கள் குவிப்பு

வார்னர் ஆட்டமிழந்தவுடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி குறைந்தது. களத்தில் இருந்த மிட்சல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடினர். ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 72 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். முதல் டெஸ்ட்டின் முதல் நாள் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புகளுக்கு 354 ரன்களை ஆஸ்திரேலியா குவித்து வலுவான நிலையில் இருந்தது.

கிளார்க்

கிளார்க்

முதல் நாள் ஆட்டத்தின் பாதியில் முதுகுவலியால் பெவிலியன் திரும்பிய கிளார்க் இன்று 2வது நாள் களம் இறங்கினார். மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீபன் சுமித் கைகோர்த்து விளையாடினர்.

 குறுக்கிட்ட மழை

குறுக்கிட்ட மழை

கிளார்க் 85 ரன்னுடனும், சுமித் 98 ரன்னுடனும் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக வீரர்கள் முன்னதாகவே உணவு இடைவேளைக்கு செல்ல நேரிட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் சுமித் 98 ரன்களுடனும், கிளார்க் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

 சதங்களைத் தாண்டிய ஸ்மித்- கிளார்க்

சதங்களைத் தாண்டிய ஸ்மித்- கிளார்க்

உணவு இடைவேளைக்குப் பிந்தைய ஆட்டத்தில் ஸ்மித்தும் கிளார்க்கும் தங்களது சதங்களைக் கடந்தனர். ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 473 ரன்களைக் குவித்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட ஆட்டம் பாதிக்கப்பட்டது.

கிளார்க் அவுட்

கிளார்க் அவுட்

பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 128 ரன்களை எடுத்த நிலையில் கிளார்க் அவுட் ஆனார். அவருக்குப் பதிலாக ஜான்சன் களமிறங்கினார். அவர் சில பந்துகளை எதிர்கொண்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவடைந்தது. 162 ரன்களுடன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். 4 பந்துகளை எதிர்கொண்ட ஜான்சன் ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்களைக் குவித்து இந்தியாவை மலைக்க வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா.

Story first published: Wednesday, December 10, 2014, 13:59 [IST]
Other articles published on Dec 10, 2014
English summary
India picked up three late wickets to pull things back on day one of the first Adelaide Test on Tuesday after a splendid batting display by Australian opener David Warner (145), skipper Michael Clarke (60 retired hurt) and Steve Smith (72*).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X