For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் சாதனைக்கு முடிவு..? கிட்ட வந்த கோலி..! வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அது நடக்குமா..?

ஆன்டிகுவா: டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை.

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக கோலி 2014ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது.

இதுவரை 46 போட்டிகளில் 26ல் இந்தியா வாகை சூடியுள்ளது. தோனி தலைமையில் இந்தியா 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வென்று காட்டியிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதில் வெற்றி பெற்றால் விராட் கோலி, தோனியின் சாதனையை சமன் செய்வார்.

இந்திய அணி சாதனை

இந்திய அணி சாதனை

கடந்த காலங்களில் கோலி தலைமையிலான இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது. ஆனால் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

19வது சதமடிப்பாரா?

19வது சதமடிப்பாரா?

தோனியின் சாதனையுடன் மற்றொரு சாதனைக்கு அருகிலும் இருக்கிறார் விராட் கோலி. அதாவது கோலி கேப்டனாக இதுவரை 18 சதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் பாண்டிங் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு சதம் போதும்.

சாதனை சமன்

சாதனை சமன்

இதுவரை ஆஸ்திரேலிய கேப்டனாக பாண்டிங் 19 செஞ்சுரி அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது போட்டியில் கோலி ஒருவேளை சதம் அடிக்கும் பட்சத்தில் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார்.

ஸ்மித் 25 சதங்கள்

ஸ்மித் 25 சதங்கள்

உலகளவில் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் க்ரீமி ஸ்மித் வைத்திருக்கிறார். மொத்தம் 25 சதங்களை அவர் கேப்டனாக அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனையும் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, August 21, 2019, 9:06 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
2 records are waiting for Indian captain virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X