தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்- 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Posted By: Staff
தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்ட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. கேப்டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து ஜோகன்னஸ்பர்க்கில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

சுமாரான ஆட்டம்

சுமாரான ஆட்டம்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா 194 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியா 247 ரன்கள்

இந்தியா 247 ரன்கள்

ஜோகன்னஸ்பர்க் மைதானம் இந்திய வீரர்களை படாதபாடுபடுத்தியது. இருப்பினும் சமாளித்து 2-வது இன்னிங்ஸில் 247 ரன்கள் குவித்தனர்.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா வீரர்கள்

தடுமாறிய தென்னாப்பிரிக்கா வீரர்கள்

இதனால் தென்னாப்பிரிக்கா வெல்ல 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா வீரர்களால் நிலைத்து நிற்க முடியாத நிலையில் மைதானத்தில் பந்து தாறுமாறாக பாய்ந்தது. இதனால் ஆட்டம் நேற்று பாதிக்கப்பட்டது.

ஷமி அபார பந்து வீச்சு

ஷமி அபார பந்து வீச்சு

224 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி 177 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 63 ரன்களில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் ஷமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
India beat South Africa by 63 runs in the third test match at Johannesburg.
Story first published: Saturday, January 27, 2018, 22:36 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற