For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு நெருக்கடி தரப்போகும் 4 முக்கிய வீரர்கள்..இங்கிலாந்து அணியின் பலம்! சமாளிக்குமா இந்தியா

சிட்னி : டி20 உலககோப்பையில் இன்றைய 2வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி வீரர்களுக்கு சற்றும் பஞ்சமில்லை.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி தரப்போகும் 4 வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?டி20 உலககோப்பை - இங்கிலாந்துடன் மோதி 10 வருசம் ஆச்சா? கடைசியாக நடந்த போது என்ன ஆச்சு தெரியுமா?

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இலங்கை எதிராக பேட்டிங்கில் 42 ரன்கள் தனது கடைசி ஆட்டத்தில் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் முக்கியத்துவமான ஆட்டத்தில் பட்டாசு போல் வெடிப்பார்கள். இதனால் ஸ்டோக்சை இந்திய அணி சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

சாம் கரண்

சாம் கரண்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக சாம் கரண் விளங்குகிறார். தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் இறுதிக் கட்டத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களின் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவர். நடப்பு டி20 உலககோப்பையில் 4 போட்டியில் விளையாடி இருக்கும் சாம் கரண் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

லிவிங்ஸ்டோன்

லிவிங்ஸ்டோன்

இங்கிலாந்து அணியின் நடுவரிசையில் களமிறங்கும் லிவிங்ஸ்டோன், நடப்பு உலககோப்பையில் அமைதியாகவே இருக்கிறார். ஆனால் இந்த எரிமலை வெடித்தால் எதிரணிக்கு கஷ்டம் தான். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டையும் பேட்டிங்கில் பொளக்கும் திறமை கொண்ட லிவிங்ஸ்டோன், சுழற்பந்தையும் வீசி ரன்களை கட்டுப்படுத்துவார். எனவே, இன்றைய ஆட்டத்திலும் லிவிங்ஸ்டோனை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் குறித்து யாருக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்திய ரசிகர்களுக்கு நல்ல பரீட்சையம். காரணமாக, ஐபிஎல் தொடரில் அவருடைய திறமையை பார்த்தவர்கள் ஆச்சே. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால், ஜாஸ் பட்லரை குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க வைக்க வேண்டும். நிடப்பு உலககோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்தில் 73 ரன்கள் விளாசி பெட்லர் தனி ஆளாக வெற்றியை தேடி தந்து நல்ல பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 10, 2022, 11:21 [IST]
Other articles published on Nov 10, 2022
English summary
4 Major Players in England is a big concern for Team India in semifinal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X