For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து.. கடைசி பந்து வரை விறுவிறு..!! ஓயிட்வாஷ்க்கு வாய்ப்பில்ல ராஜா

சிட்னி: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே இழந்தது

இதனையடுத்து தொடரை முழுமையாக வென்று இங்கிலாந்தை ஓயிட்வாஷ் செய்யும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா அபாரமாக விளையாடி 137 ரன்களை விளாசினார்.

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் – பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் இதோ..!!இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் – பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் இதோ..!!

பாரிஸ்டோ சதம்

பாரிஸ்டோ சதம்

இதனால் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல் சொதப்பியது. இருப்பினும் இங்கிலாந்து அணியின் பாரிஸ்டோ, சதம் விளாசினார்.இதன் மூலம் நடப்பு ஆஷஸ் தொடரில் முதல் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

உஸ்மான் சாதனை

உஸ்மான் சாதனை

இதனால் இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்தது. 122 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் உஸ்மான் கவாஜா சதம் விளாச, அந்த அணி 265 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.இதனையடுத்து 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் களமிறங்கியது. விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது. கட்டையை போட்டு விளையாடிய ஹமீது 58 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

ஆஸ்திரேலியா தீவிரம்

ஆஸ்திரேலியா தீவிரம்

எனினும் மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய ஜாக் கிராலி 77 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். டேவிட் மாலன் 4 ரன்களும் , ஜோ ரூட் 24 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி சென்றது. அப்போது தனி ஆளாக நின்று தடுத்த பாரிஸ்டோ 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

இதனையடுத்து எஞ்சியுள்ள 14 ஓவரில் 2 விக்கெட் எடுக்க வேண்டும் என்று நிலையில் ஆஸ்திரேலியா வெற்றியை துரத்தியது. அப்போது லீச், பிராடு ஜோடி கட்டையை போட்டு டிராவிற்கு முயற்சித்தது. கடைசி 3 ஓவர்கள் இருக்கும் போது லீச்சும் அட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு விக்கெட் தான் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. எனினும் கடைசி 15 பந்துகளையும் எதிர்கொண்டு, விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆண்டர்சன், பிராடு ஜோடி போட்டியை டிரா செய்தது. இதன் மூலம் இங்கிலாந்தை ஓயிட்வாஷ் செய்யும் வாய்ப்பு பறிப்போனது.

Story first published: Sunday, January 9, 2022, 20:30 [IST]
Other articles published on Jan 9, 2022
English summary
4th Ashes Test England vs Australia ends in a sensational draw ஆஸி.க்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து.. கடைசி பந்து வரை விறுவிறு..!! ஓயிட்வாஷ்க்கு வாய்ப்பில்ல ராஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X