For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

23 சதங்கள் விளாசி கங்குலி சாதனையை தகர்த்தார் விராட் கோஹ்லி!

By Veera Kumar

சென்னை: 23 சதங்கள் விளாசியதன் மூலம், அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி, விராட் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். உலக அளவில் 23 செஞ்சுரிகள் விளாசிய 5வது வீரர் விராட் கோஹ்லியாகும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி, அபாரமாக ஆடி 112 பந்தில் சதம் கடந்தார். வெகுநாட்களாக ஃபார்மில் இல்லாத விராட் கோஹ்லி, கடந்த போட்டியில் 77 ரன்கள் விளாசி நம்பிக்கை தந்த நிலையில், இன்று சதம் விளாசினார்.

கங்குலியை தாண்டினார்

கங்குலியை தாண்டினார்

இது விராட்டின் 23வது சதமாகும். உலக அளவில் 49 ஒருநாள் சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் ஒருவர் எடுத்தது 22 சதங்கள். அது கங்குலியுடையது. இன்றைய சதத்தின் மூலம், கங்குலியை தாண்டி சச்சினுக்கு அடுத்து அதிக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார்.

உலக அளவில்

உலக அளவில்

உலக அளவில் 23 சதம் விளாசிய 5வது வீரர் விராட் கோஹ்லியாகும். சச்சின், பாண்டிங், ஜெயசூர்யா, சங்ககாரா ஆகியோர் கோஹ்லிக்கு முன்பாக பட்டியலிலுள்ளனர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த கோஹ்லி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சச்சின் முதலிடம்

சச்சின் முதலிடம்

உலக அளவில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், 30 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும், 28 சதங்களுடன் ஜெயசூர்யா 3வது இடத்திலும், 25 சதங்களுடன் குமார் சங்ககாரா 4வது இடத்திலும், 23 சதங்களுடன் கோஹ்லி 5வது இடத்திலும் உள்ளனர்.

அந்த ஐந்து பேர்

அந்த ஐந்து பேர்

22 சதங்கள் விளாசிய கிறிஸ் கெய்ல், தில்ஷன், சவுரவ் கங்குலி ஆகியோர் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், ஹர்ஷல் கிப்ஸ் ஆகிய மூன்று தென் ஆப்பிரிக்க வீரர்களும் தலா 21 சதங்களுடன் 7வது இடத்திலுள்ளனர். சையது அன்வர் 20 சதங்களுடனும், பிரைன் லாரா 19 சதங்களுடனும், மார்க்வாக் 18 சதங்களுடனும், மு்றையே, 8வது முதல் 10வது வரையிலுள்ள இடங்களிலுள்ளனர்.

Story first published: Thursday, October 22, 2015, 18:40 [IST]
Other articles published on Oct 22, 2015
English summary
India's Virat Kohli achieved yet another milestone in his One Day International (ODI) career when he surpassed former captain Sourav Ganguly and moved to 2nd spot, behind batting legend Sachin Tendulkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X