For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செஸ் ஒலிம்பியாட் 2022.. தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Recommended Video

செஸ் ஒலிம்பியாட் சென்னை வந்தற்கு யார் காரணம்?

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக பிரமாண்ட தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 189 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இத்தகைய செஸ் ஒலிம்பியாட் குறித்து 4 முக்கிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம் இசை.. உற்சாகத்தில் மிதந்த அயல்நாட்டவர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம் இசை.. உற்சாகத்தில் மிதந்த அயல்நாட்டவர்

அட்டகாச வாய்ப்பு

அட்டகாச வாய்ப்பு

1924ம் ஆண்டு தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். இதில் கடந்த 1956ல் மாஸ்கோவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தான் இந்திய தனது முதல் அணியை அனுப்பியது. இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இந்தாண்டு இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.

வரலாற்றில் முதல்முறை

வரலாற்றில் முதல்முறை

மிகவும் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் இந்தாண்டு தான் இருப்பதிலேயே அதிகப்படியான அணிகள் கலந்துக்கொள்கின்றன. ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் கலந்துக்கொள்ளவுள்ளன. அதன்படி சுமார் 2000 பேருக்கு மேல் இந்த போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடவுள்ளனர்.

ஸ்பெஷல் சலுகை

ஸ்பெஷல் சலுகை

வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இந்தாண்டு மொத்தமாக 6 அணிகளை களமிறக்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விதிப்படி தொகுத்து நடத்தும் நாடு 4 அணிகளை தான் களமிறக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு ஒட்டுமொத்த அணிகளின் கணக்கு ஒற்றைப் படையில் இருப்பதால், இந்தியா கூடுதலாக 2 அணிகளை சேர்த்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் களமிறங்குகின்றன.

அணி வீரர்கள் ஃபார்மெட்

அணி வீரர்கள் ஃபார்மெட்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் தலா 5 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் இதில் 4 பேர் மட்டும் தான் விளையாடுவார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு வீரர் என்ற முறை கணக்கிடப்படும். பெரும்பாலும் விளையாடாமல் போகும் கேப்டன்கள், போட்டியின் வீரர்களை களமிறக்குவது, போன்ற பணிகளை மட்டுமே அங்கிருந்து பார்த்துக்கொள்வார்.

பரிசுத்தொகை எவ்வளவு

பரிசுத்தொகை எவ்வளவு

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மொத்தமாக 11 சுற்றுகளாக நடத்தப்பட்டு, இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலில் இருக்கும் அணிகளை கணக்கிட்டே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்ற அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்கள் அளிக்கப்படுமே தவிர்த்து பரிசுத்தொகைகள் பெரும்பாலும் வழங்கப்படமாட்டாது.

Story first published: Thursday, July 28, 2022, 19:46 [IST]
Other articles published on Jul 28, 2022
English summary
5 Facts about Chess olympiad 2022 ( செஸ் ஒலிம்பியாட் 2022 ) செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் குறித்து 5 முக்கிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X