For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேவாக்கிற்கு பிறகு முச்சதம் விளாசிய முதல் இந்திய வீரர்.. கருண் நாயர் படைத்தார் பல சாதனைகள்

By Veera Kumar

சென்னை: கருண் நாயர். இந்த பெயர் இன்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் வாயில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை. நெட்டிசன்கள் அதிகமாக பயன்படுத்திய எழுத்து.

சாது போல அணிக்குள் வந்த கருண் நாயகர், இப்படி வீறு கொண்டு எழுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில்தான் இந்திய அணியில் நாயருக்கு இடம் கிடைத்தது.

3வது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் விளாசியுள்ளார் கருண் நாயர். அதுவும் கிரிக்கெட்டை கொண்டாடி போற்றும் சென்னையில் வைத்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளது அந்த சாதனை மகுடத்தில் வைக்கப்பட்ட வைரக் கல்.

303 ரன்கள் எடுத்து இன்னும் ரன் தாகம் தீராமல் வெறி கொண்ட வேங்கையாய் கருண் உறுமியபடி இருந்தாலும், அணியின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு டிக்ளேர் முடிவை எடுத்தார் கேப்டன் கோஹ்லி.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்களை குவித்து கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்த உச்சபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையில் கருண் நாயரின் பங்கு பாதிக்கும் மேல் என்பதை அவரது ரன் குவிப்பே உலகிற்கு விளக்கும்.

சேவாக் சாதனை

சேவாக் சாதனை

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்திர சேவாக், இதற்கு முன்பு இரு முறை முச்சதம் கடந்துள்ளார். அதன்பிறகு முச்சதம் கடந்த 2வது இந்திய வீரர் கருண் நாயர்தான். 309 மற்றும் 319 ரன்களை சேவாக் குவித்திருந்தார். இன்று கருண் இருந்த வேகத்திற்கு இந்த ரன்னையும், முந்தியிருக்க கூடும். ஆனால், ஏற்கனவே கூறியபடி இன்னும் ஒருநாள் தான் பாக்கியுள்ள நிலையில், அணியின் வெற்றி வாய்ப்புக்காக கோஹ்லி அந்த ரன் மிஷினை தற்காலிகமாக நிறுத்திவிட்டார். இளம் வீரரான கருண் நாயர் அச்சாதனையை இனி வருங்காலங்களில் படைப்பார் என்பதே ரசிகர்கள் நம்பிக்கை.

பாராட்டும் சேவாக்

சேவாக்கும், கருண் நாயரின் சாதனையை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். தான் மட்டும் தனித்து இருந்ததாகவும், இப்போது ஜோடிக்கு ஆள் கிடைத்துவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

டோணி சாதனை முறியடிப்பு

டோணி சாதனை முறியடிப்பு

மேலும் பல சாதனைகளும் நாயரின் பேட்டிலிருந்து புறப்பட்டன. இந்திய வீரர் ஒருவர் 5வது அல்லது அதற்கு பிறகு பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்பு, டோணி ஆஸி.க்கு எதிராக 224 ரன்கள் குவித்ததே சாதனை.

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

5வது மற்றும் அதற்கு பிறகு களமிறங்கி 200 ரன்களை தாண்டியது மொத்தமே 3 வீரர்கள்தான். டோணியும், லட்சுமணனும்தான் முன்பு இதை செய்திருந்தனர். சச்சின், ராகுல் டிராவிட், லட்சுமண் போன்ற இந்தியா கண்ட பல டெஸ்ட் ஜாம்பவான்களின் தனிப்பட்ட அதிகபட்ச ரன் ஸ்கோரை கருண் நாயர் கடந்துவிட்டார்.

ருசி கண்ட புலி

ருசி கண்ட புலி

கடந்த வருடம் ரஞ்சி போட்டியில் கர்நாடகாவுக்காக ஆடிய இந்த 'சேரநாட்டு' பூர்வீகக்காரர், தமிழகத்திற்கு எதிராக 329 ரன்களை குவித்து முச்சத ருசியை அறிந்தவர்தான்.

Story first published: Monday, December 19, 2016, 17:36 [IST]
Other articles published on Dec 19, 2016
English summary
Records tumbled at the MA Chidambaram Stadium here today (December 19) as Karun Nair hit an epic 303 not out (381 balls, 32x4, 4x6) in the 5th Test against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X