ஆடு பாம்பே.. வைரலான ரஹீமின் நாகினி டான்ஸ்.. போட்டி போடும் விளம்பர நிறுவனங்கள்!

Posted By:
நாகினி நடனத்துக்கு போட்டி போடும் விளம்பர நிறுவனங்கள்- வீடியோ

சென்னை: முத்தரப்பு தொடரில் தினேஷ் கார்த்திக் வைரல் ஆனது போலவே நாகினி டான்ஸும் வைரல் ஆனது. வங்கதேச வீரர் ரஹீம் ஆடிய நாகினி டான்ஸ் பற்றி பேசாத ஆட்கள் இல்லை.

இந்த நாகினி டான்ஸ் விளம்பர மாடலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதை வைத்து விளம்பரங்கள் வெளியாகலாம்.

மின்னல் வேக மனிதன் உசேன் போல்ட் செய்யும் போஸ் ''மான் கராத்தே'' படத்தில் இடம்பிடித்தது போலவே இதிலும் நடக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு பெரிய போட்டியே நிலவுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

இலங்கைக்கு எதிராக வங்கதேசம் மோதிய முதல் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 20 ஓவரில் 214 ரன்கள் எடுத்தது. அதனை வங்கதேசம் எளிதாக எடுத்து சாதனை படைத்தது. இதில் 72 ரன்கள் எடுத்த முஸ்தபிர் ரஹீம் வின்னிங் ஷாட் அடித்துவிட்டு நாகினி டான்ஸ் ஆடினார். அப்போதே அது வைரல் ஆனது.

அணி

அணி

ஆனால் அதற்கு அடுத்து இறுதி போட்டிக்கு முன் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டிதான் இன்னும் சிறப்பானது. இலங்கை 20 ஓவருக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது. அப்போது அந்த அணியின் வீரர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்த்து நாகினி டான்ஸ் ஆடினார்கள்.

பெரிய வைரல்

இந்த நாகினி டான்ஸ் பெரிய அளவில் வைரல் ஆனது. இந்தியா, இலங்கை ரசிகர்கள் நாகினி டான்சை வைத்து கிண்டல் சையது கொண்டு இருந்தார்கள். இது மிகவும் காமெடியான செயல் என்று குறிப்பிட்டு வந்தார்கள்.

நல்ல செயல் அல்ல

இவர்களின் டான்சிற்கு வரவேற்பு வந்ததை விட திட்டுகள் வந்ததே அதிகம் . இவர் ''இவர்கள் விளையாடும் கிரிக்கெட்டைவிட, இவர்களின் நாகினி டான்ஸ் நன்றாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரிய விஷயமாக மாறும்

பெரிய விஷயமாக மாறும்

இவர்களின் நாகினி டான்ஸ் பெரிய விளம்பர மாடலாக மாற இருக்கிறது. இதற்கு ஏற்கனவே நிறைய நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு இருக்கிறது. தங்கள் விளம்பர மாடலை நாகினி போல ஆடவைத்து வைரலாக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஐபிஎல் தொடரின் போது வரும் விளம்பரங்களில், ஏதாவது ஒரு விளம்பரம் நாகினி டான்ஸ் விளம்பரமாக இருக்கலாம்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mushfiqur Rahim’s Nagin dance became viral on social media after Tri series. Ad agencies fighting to get a copyright on Mushfiqur Rahim’s Nagin dance.
Story first published: Wednesday, March 21, 2018, 10:54 [IST]
Other articles published on Mar 21, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற