For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பர்த்டே பாய் ரஷித் கான் சூப்பர்.. வங்கதேச பேட்டிங் புஸ்ஸ்ஸ்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்

அபுதாபி : ஆசிய கோப்பை போட்டிதொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளை அடுத்தடுத்து வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இப்போட்டியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இதோ :

1 இரு அணிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்

சூப்பர் 4 சுற்றுக்கான அணிகள் இறுதி செய்யபட்டுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு போட்டித்தொடரில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது மற்றும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் பங்களாதேஷ் அணியின் முக்கிய வீரர்களான முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் காரணமாக விலகிய தமீம் இக்பாலுக்கு பதிலாக ஹொசைன் சாண்டோ களமிறங்கினார். ரஹ்மானுக்கு பதிலாக அபு ஹைதர் ரோனி களமிறங்கினார். ஆப்கானிஸ்தான் அணியில் ஷமியுல்லா ஷென்வரி களமிறக்கப்பட்டார்.

afganisthan beats bangladesh and top of the table

2 ஷாஹிடியின் அரைசதம்

ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்மதுல்லா ஷாஹிடி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் எடுக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.

3 சாகிப் அல் ஹசனின் பொறுப்பான ஆட்டம்

பங்களாதேஷ் அணியின் ஆல் ரௌண்டர் சாகிப் அல் ஹசன் மட்டுமே நேற்றைய தினம் சிறப்பாக விளையாடிய ஒரே பங்களாதேஷ் வீரர் ஆவர். அவர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் பேட்டிங்கில் அதிகபட்சமாக 32 ரன்களையும் குவித்தார்.

afganisthan beats bangladesh and top of the table

4 சொதப்பிய பங்களாதேஷ் பேட்டிங்

பங்களாதேஷ் அணியின் பேட்டிங் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்தது. அந்த அணியின் வீரர்கள் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தனது விக்கெட்களை இழந்தனர். பங்களாதேஷ் அணி முதல் 14 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 ரஷீத் கானின் அசத்தல்

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரஷீத் கான். அவர் நேற்றைய போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரது அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி கடைசி 10 ஓவர்களில் 96 ரன்களை குவித்தது. ரஷீத் கான் பந்துவீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. நேற்று அவரது 20ஆவது பிறந்தநாள். தான் பிறந்த நாளில் தாய் நாட்டிற்கு வெற்றியைத் தேடிதந்துள்ளார்.

Story first published: Friday, September 21, 2018, 9:50 [IST]
Other articles published on Sep 21, 2018
English summary
AFGanisthan beats bangladesh and top of the table
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X