For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் தகுதிபெற்றது…. முன்னணி அணிகளுக்கு எச்சரிக்கை ரிங்க்டோன்!

By Srividhya Govindarajan

டெல்லி: டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது.

2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்க உள்ளது. இதில், 10 அணிகள் விளையாட உள்ளன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன், கடந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில், ஐசிசி தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

Afghan in world cup


அதன்படி, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.

மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்தது. அதில், இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இன்டீஸ், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய ஐசிசி ஒருதினப் போட்டிக்கான அங்கீகாரம் பெற்ற அணிகள் விளையாடின.

இதைத் தவிர உலக கிரிக்கெட் லீக் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த, நெதர்லாந்து, பப்புவா நியூ குய்னா, ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகளுடன், உலக கிரிக்கெட் லீக் இரண்டாவது டிவிஷனில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நேபாளம், யு.ஏ.இ., அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடின.

இதில், வெஸ்ட் இன்டீஸ் அணி, உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, உலகக் கோப்பை போட்டிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

2015 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வென்று அசத்தியது.

19 வயதாகும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஒருதினப் போட்டி பவுலர்களில் இரண்டாவது இடத்திலும், ஆல்- வுண்டர்களில் 4வது இடத்திலும் உள்ளார். டி-20 போட்டியில் பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார்.

மிகவும் இளவயதில் கேப்டன் என்ற பெருமை பெற்றுள்ள ரஷீத் கான், அனைத்து போட்டிகளிலும் அசத்தி வருகிறார். தகுதி சுற்று போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணியை வென்றுள்ளது மற்ற முன்னணி அணிகளுக்கு கொடுத்துள்ள ஒரு எச்சரிக்கை ரிங்டோன்.

Story first published: Saturday, March 24, 2018, 10:51 [IST]
Other articles published on Mar 24, 2018
English summary
Afghanistan qualified for the world cup cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X