For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குட்பை..! அதிரடி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் கேப்டன்.. அதிர்ந்த சர்வதேச கிரிக்கெட் உலகம்

காபூல்: ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டரான முகமது நபி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்ற பின் முதன் முறையாக இந்தியாவுடன் விளையாடியது. அதன் பின்னர் அயர்லாந்தை சந்தித்தது. தற்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

அந்த அணியின் முக்கிய வீரரும், முன்னாள் கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டரான முகமது நபி டெஸ்ட், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தமது ஓய்வை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அதை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு இருக்கிறது.

ஓய்வு உறுதி

வங்கதேச தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மானேஜரும் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவை ஐசிசி, கிரிக்கெட் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

ஒருநாள் தொடரில் கவனம்

ஒருநாள் தொடரில் கவனம்

தற்போது, வங்கதேசத்துடனான தொடரில் ஆடி வருகிறார். 34 வயதாகும் முகமது நபி ஒருநாள் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.

நவ.27ல் போட்டி

நவ.27ல் போட்டி

ஐசிசி சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாத ஆப்கானிஸ்தான், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் உடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி டேராடூனில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.

கேப்டன் பணி

கேப்டன் பணி

முகமது நபி ஆப்கானிஸ்தானின் சிறந்த வீரர். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தவர். அவரின் ஆட்டத்தில் ஒருநாள் தொடர்களில் அணியின் மரியாதை சர்வதேச அரங்கில் உயர்ந்தது.

ஐபிஎல்லின் ஒரே வீரர்

ஐபிஎல்லின் ஒரே வீரர்

2014ம் ஆண்டு ஆசிய கோப்பை, 2015ம் ஆண்டு உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர். ஐபிஎல் தொடருக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

Story first published: Sunday, September 8, 2019, 14:07 [IST]
Other articles published on Sep 8, 2019
English summary
Afghanistan all rounder mohammad nabi confirms his retire in test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X