For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாஸு.. விக்கெட் கீப்பிங்ன்னா என்ன தெரியுமா?.. "நச்"சுன்னு விளக்கம் சொன்ன டோணி!

பெங்களூரு: விக்கெட் கீப்பிங் குறித்து டோணி செமையான விளக்கம் கொடுத்துள்ளார். வெற்றிகரமான விக்கெட் கீப்பராக தான் ஜொலித்தது எப்படி என்பதையும் அவர் அதில் விளக்கியுள்ளார்.

வழக்கமான விக்கெட் கீப்பராக இல்லாமல் வித்தியாசமாக செயல்படுவர் டோணி. அதுவே அவரது ஸ்டைலாகவும் மாறியது. அவரது விக்கெட் கீப்பிங் ஸ்டைல் சில நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கூட அவர் இந்தியாவின் வெற்றிகரமான விக்கெட் கீப்பராகவும் ஜொலிக்க அது வழி கோலியுள்ளது.

தான் வெற்றிகரமான விக்கெட் கீப்பராக ஜொலிக்க என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படுத்தியதில்லை, வெளிப்படையாக டோணி பேசியதில்லை. ஆனால் தற்போது அதை வெளியிட்டுள்ளார்.

3வது பெஸ்ட் விக்கெட் கீப்பர்

3வது பெஸ்ட் விக்கெட் கீப்பர்

உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருப்பவர் டோணி. முதலிடத்தில் 998 டிஸ்மிஸல்களுடன் மார்க் பெளச்சரும், 902 டிஸ்மிஸல்களுடன் ஆடம் கில்கிறைஸ்ட் 2வது இடத்திலும் உள்ளனர். 768 டிஸ்மிஸல்களுடன் டோணி 3வது இடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் இவர்தான் பெஸ்ட் விக்கெட் கீப்பர்.

அந்த ரகசியம் என்னவோ

அந்த ரகசியம் என்னவோ

சிறந்த விக்கெட் கீப்பராக ஜொலிப்பது குறித்த கேள்விக்கு தற்போது டோணி விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து டோணி கூறுகையில், நான் வழக்கத்திற்கு விரோதமான ஸ்டைலில் செயல்படுவதே எனது வெற்றியின் ரகசியம் என நினைக்கிறேன்.

பிளமிங் கூட கேட்பார்

பிளமிங் கூட கேட்பார்

நான் ஐபிஎல் போட்டிகளின் பயிற்சியின்போது கீப்பிங் பிராக்டிஸ் செய்யவே மாட்டேன். அதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் (சென்னை சூப்பர் கிங்ஸ் கோச்) கூட கேட்பார். ஏன் கீப்பிங் பிராக்டிஸ் செய்வதில்லை என்று. ஆனால் 9 வருட கால ஐபிஎல் அனுபவத்தில் ஒருமுறை கூட நான் பயிற்சி செய்தது இல்லை.

மனசுலதான் பிராக்டிஸ் தேவை

மனசுலதான் பிராக்டிஸ் தேவை

உண்மையில் விக்கெட் கீப்பிங் என்பது மைதானத்தில் பிராக்டிஸ் செய்து வருவதில்லை. மனசில்தான் பிராக்டிஸ் தேவை. என்னைக் கேட்டால் விக்கெட் கீப்பர்களுக்குப் பயிற்சியே தேவையில்லை. சில விக்கெட் கீப்பர்கள் பயங்கர பில்டப் கொடுப்பார்கள்.

ஓவராக்டிங் உடம்புக்கு ஆகாது

ஓவராக்டிங் உடம்புக்கு ஆகாது

அப்படி செய்வார்கள், இப்படி செய்வார்கள். மைதானத்தில் படுக்காத குறையாக கீப்பிங் செய்வார்கள். தவளை மாதிரி உட்கார்ந்து கொண்டு கீப்பிங் செய்வார்கள். தரையோடு தரையாக வாயை வைத்து கீப்பிங் செய்வாரா்கள். அதெல்லாம் தேவையே இல்லை.

100 பாலை விடு.. ஆனா விக்கெட் எடு

100 பாலை விடு.. ஆனா விக்கெட் எடு

100 பந்துகளைக் கூடத் தவற விடலாம். தப்பே இல்லை. ஆனால் சரியான பந்து வரும்போது பிடிக்காமல் விடாதீர்கள். அதுதான் கீப்பருக்கு முக்கியம். ஸ்டம்பிங் வாய்ப்பு கிடைக்குதா, அதை சரியாக செய்யுங்கள். கேட்ச் வருதா.. விட்ராதீங்க. அதுதான் தேவை.

வேலைதான் முக்கியம்

வேலைதான் முக்கியம்

கீப்பர் எப்படிப்பட்டவர் என்பது முக்கியமில்லை. அவர் மோசமான விக்கெட் கீப்பராக இருக்கலாம். ஆனால் சரியான முறையில் ஸ்டம்பிங் செய்தால், சரியான கேட்ச்சைப் பிடித்தால், அணிக்கு சரியான திருப்பத்தைக் கொடுத்தால், கேப்டனை சரியான முறையில் வழி நடத்தினால்.. அவர்தான் பெஸ்ட் கீப்பர் என்றார் டோணி.

செம விளக்கம் டோணி!

Story first published: Saturday, January 20, 2018, 14:11 [IST]
Other articles published on Jan 20, 2018
English summary
Mahendra Singh Dhoni has unusual methods behind the stumps which has always flummoxed old time wicketkeepers. Despite that, Dhoni is third in the list of most successful wicketkeepers in international cricket behind Mark Boucher - 998 and Adam Gilchrist - 902. Dhoni currently has 768 dismissals as a wicketkeeper. So what's his method behind success?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X