For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாரேன்.. தோற்றாலும் இந்தியா திரும்பி அடிக்கிறாங்க.. அந்த ஒரு "சீக்ரெட்" தான் காரணம் - அகர்கர்

மும்பை: இந்திய அணியின் உண்மையான வலிமை என்ன என்பது குறித்து அஜித் அகர்கர் தனது பாயிண்ட்டை முன்வைக்கிறார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் இப்போட்டி தொடங்குகிறது.

10 நாள் குவாரண்டைனில் இருக்கும் இந்திய அணி, இன்று முதல் தான், தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இன்னும் எட்டு நாட்களே போட்டிக்கு மீதமிருக்கும் நிலையில், அந்த வித பயிற்சி ஆட்டங்களும் இன்றி, இந்திய அணி பயிற்சியை தொடங்கியுள்ளது.

 தோற்றாலும் கம்பேக்

தோற்றாலும் கம்பேக்

இந்நிலையில், தற்போதைய இந்திய அணியின் மிகப்பெரிய வலிமை என்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர், "இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி தான் வெற்றிப் பெறும் நினைத்தார்கள். கண்டிஷன்ஸ் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. ஸ்பின் டிராக்கில் நிச்சயம் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. அதன் பிறகு மீண்டு வந்த இந்திய அணி, அடுத்த மூன்று போட்டிகளில் வரிசையாக வென்று தொடரைக் கைப்பற்றியது.

 சாதித்த இந்தியா

சாதித்த இந்தியா

அதே போல், ஆஸ்திரேலியா தொடர். அங்கு முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதுவும், 2வது இன்னிங்ஸில் மிக மோசமாக வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. அதன் பிறகு தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி நாடுதிரும்ப, ஷமி காயம் காரணமாக வெளியேற, அணியின் டாப் பேட்ஸ்மேன் மற்றும் டாப் பவுலரின் இடம் காலியானது. ஆனால், முகமது சிராஜ், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூன்று பவுலர்களை ரீபிளேஸ் செய்து வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல், தொடரை 2 - 1 என்று வென்று சரித்திரம் படைத்தது இந்தியா.

 வெற்றிப்பாதை

வெற்றிப்பாதை

இது தான் இந்திய அணியின் ஆழம் என்கிறேன். இதுதான் வலிமை என்கிறேன். இந்திய அணியின் டாப் வீரர்கள் இல்லையென்றாலும், மாற்று வீரர்களைக் கொண்டு இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்புகிறது. இதுதான் இந்தியாவின் மாபெரும் பலம் என்கிறேன். டெஸ்ட் தொடர்களில் தொடக்க போட்டிகளில் தோற்றாலும், அடுத்தடுத்து மாற்று வீரர்களை வைத்து மீண்டு வந்து வெற்றிப் பெறுவதே இந்திய அணியின் ஆற்றல். இது இங்கிலாந்திலும் கைக்கொடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.

 சாதிப்பாரா கோலி?

சாதிப்பாரா கோலி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. இவ்விரண்டு தொடர்களும் இந்திய அணி வீரர்களுக்கு அக்னீப்பரீட்சை எனலாம். இவ்வளவு ஏன்.. விராட் கோலிக்கே, இத்தொடரின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து அவரது டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு முடிவுரை எழுதப்படலாம்.

Story first published: Thursday, June 10, 2021, 15:35 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
Agarkar highlights India's two biggest strengths - அகர்கர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X