For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்ணை காரை ஏற்றி கொன்ற ரஹானே தந்தை அதிரடி கைது

By Veera Kumar

மும்பை: காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கில் கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே தந்தை மதுகர் பாபுராவ் கைது செய்யப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக செயல்படுபவர் ரஹானே. மும்பையை சேர்ந்த ரஹானே இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

ரஹானே தந்தை மதுகர் பாபுராவ் (54). இவர் விடுமுறையை கழிக்க தனது குடும்பத்துடன் சம்பவத்தன்று புனே-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை மதுகர்தான் ஓட்டியுள்ளார்.

சாலையோரம் மூதாட்டி மீது பாய்ந்தது

சாலையோரம் மூதாட்டி மீது பாய்ந்தது

தேசிய நெடுஞ்சாலையில் கங்கல் என்ற பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆஷாதய் என்ற 67 வயது மூதாட்டி மீது மோதியது. இதில் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார்.

ரஹானே தந்தை கைது

ரஹானே தந்தை கைது

மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால், மதுகர் பாபுராவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல பிரிவுகளில் வழக்கு

பல பிரிவுகளில் வழக்கு

கோல்காபூர் போலீசார், மதுகர் பாபுராவ் மீது 304ஏ, 337, 338, 279 மற்றும் 184 ஆகிய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெத்தனம்தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரஹானே குடும்பம்

ரஹானே குடும்பம்

இந்த சம்பவத்தை பார்த்துவிட்டு, ரஹானே குடும்பத்திற்கு இப்போது மொத்தமாக நேரம் சரியில்லை என்கிறார்கள் ரசிகர்கள். ரஹானே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் சேகரிக்க திணறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 16, 2017, 12:48 [IST]
Other articles published on Dec 16, 2017
English summary
India vice-captain Ajinkya Rahane's father, Madhukar Baburao Rahane, was arrested in Kolhapur on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X