For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்... மயிரிழையில் உயிர்தப்பிய வங்கதேச வீரர்கள்... த்ரில் அனுபவம்

கிறிஸ்ட்சர்ச்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றி விட்டார் என்று வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்பீர் ரஹீம் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு 300-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர்.

 கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச்சூடு... கிரிக்கெட் உலகம் ஷாக்... நியூசி. வங்கதேசம் 3வது டெஸ்ட் ரத்து கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச்சூடு... கிரிக்கெட் உலகம் ஷாக்... நியூசி. வங்கதேசம் 3வது டெஸ்ட் ரத்து

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே சென்ற போது, அங்கு பயங்கரமான துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதைக்கண்ட வங்கதேச வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தரையில் படுத்துக் கொண்டனர்

தரையில் படுத்துக் கொண்டனர்

என்ன நடப்பது என்பது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்த் அவர்கள் உடனடியாக தரையில் படுத்துக் கொண்டனர். உடனடியாக பாதுகாப்புடன் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சொகுசு ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அனைவரும் பத்திரம்

அனைவரும் பத்திரம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து வீரர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் நாளை நடைபெற இருந்த நிலையில், டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் ரத்து

டெஸ்ட் ரத்து

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில், 3-வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

வீரர்கள் அதிர்ச்சி

வீரர்கள் அதிர்ச்சி

இந்த திடீர் துப்பாக்கிச்சூடு வங்கதேச வீரர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதிர்ச்சியின் பிடியில் இருந்து அவர்கள் மீளவில்லை.

டுவிட்டர் பதிவு

இது குறித்து பலரும் தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். வங்கதேச கிரிக்கெட் வீரரான முஷ்பீர் ரஹீம் தமது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைவரையும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காத்துவிட்டார். நாங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 15, 2019, 12:18 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Alhamdulillah Allah save us while shooting in Christchurch in the mosque, we r extremely lucky says Bangladesh cricket player mushfiqur rahim.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X