ஒரே ஓவரில் 5 விக்கெட்..டிரிபிள் ஹாட்டிரிக் எடுத்த ஆஸி. வீரர்..10 பாலில் மொத்த டீமும் காலி

Posted By:

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அடிக்கடி உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கிரிக்கெட் உலகில் இருக்கும் பெரிய வீரர்களால் செய்ய முடியாத சாதனைகளை கூட இந்த உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அசால்ட்டாக செய்வார்கள்.

அதன்படி நேற்று மெல்போர்னில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டு இருக்கின்றது. அதில் 'எல்லூர்ன் நார்த்' அணிக்காக விளையாடிய 'நிக் குட்டன்' என்ற வீரர் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து இருக்கிறார்.

அவர் டிரிபிள் ஹாட்டிரிக் விக்கெட் எடுத்த இந்த போட்டியில் இன்னும் நிறைய வித்தியாசமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ஆஸ்திரேலிய போட்டிகள்

ஆஸ்திரேலிய போட்டிகள்

கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் அணியாக திகழும் அணிதான் ஆஸ்திரேலியா. இந்திய தொடரில் திணறினாலும் இப்போதும் அது உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை போலவே அவர்கள் ஊரில் இருக்கும் உள்ளூர் அணிகளும் சிறந்த அணிகளாகத்தான் இருக்கின்றது. அங்கு கிரிக்கெட் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பதால் அடிக்கடி உள்ளூர் போட்டிகள் அந்த கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும். இதில் நிறைய சாதனைகள் படைக்கப்படுவதும் வழக்கம்.

40 சிக்ஸ் சாதனை

இரண்டு வாரங்களுக்கு முன்பு மெல்போர்னில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் 'ஜோஷ் டன்ஸ்டன்' என்ற வீரர் 'வெஸ்ட் அகஸ்ட்டா' அணிக்காக விளையாடி ஒரே போட்டியில் 307 ரன்கள் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் அந்த போட்டியில் 307 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இவர் 40 சிக்ஸ் அடித்து 272 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியரான 'விவிலியம் ரிச்சர்ட்ஸின்' சாதனையை முறியடித்தார்.

டிரிபிள் ஹாட்ரிக்

இந்த நிலையில் தற்போது இன்னொரு சாதனை இது போன்ற உள்ளூர் போட்டிகளில் நிகழ்ந்து இருக்கிறது. மெல்போர்னில் நேற்று 'எல்லூர்ன் நார்த்' அணி 'லார்ட் ரோப்' என்ற அணியை எதிர்த்து விளையாடியது. இதில் எல்லூர்ன் நார்த் அணிக்காக விளையாடிய 'நிக் குட்டன்' என்ற வீரர் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் இரண்டே ஓவர்களில் 8 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் முதல் டிரிபிள் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். ஒரே ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் எடுப்பதற்கு டிரிபிள் ஹாட் டிரிக் என்று பெயர்.

 சரியாவே விளையாடல

சரியாவே விளையாடல

எல்லூர்ன் நார்த் அணிக்காக விளையாடிய நிக் குட்டன் இந்த சாதனை குறித்து பேசி இருக்கிறார். அதில் "நான் இன்னைக்கு சரியாவே விளையாடல, முக்கியமாக முதல் பால் ரெண்டுமே வொய்டீ பால். மத்தபடி நான் சிறப்பா எதுவும் பண்ணவே இல்லை. ஒரு வருசத்துக்கு அப்பறம் கிரிக்கெட் விளையாடுறேன். எனக்கே ஆச்சர்யமா இருக்கு இந்த சாதனை'' என்றார்.

Story first published: Sunday, October 29, 2017, 12:34 [IST]
Other articles published on Oct 29, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற