For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னமா கோபம் வருது நம்ம ஆண்டர்சனுக்கு.. போட்டுச்சு பாருங்க ஐசிசி அபராதத்தை!

லண்டன் : இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சன் நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவருக்கு அபராதம் மற்றும் தடைப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியா ஆடிய போது, கோலிக்கு எதிராக LBW ரிவ்யூ கேட்டார் ஆண்டர்சன். அதில் அவுட் இல்லை என கூறிவிட்டதால் எரிச்சலடைந்த ஆண்டர்சன், நடுவரிடம் கோபமாக பேசியுள்ளார்.

அதற்காக இப்போது அவருக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. அதை ஆண்டர்சனும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவருக்கு ஒரு தடை புள்ளியும் கிடைக்கும். குறிப்பிட்ட அளவு தடைப் புள்ளிகள் பெற்றால், சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிவ்யூ கேட்ட ஆண்டர்சன்

ரிவ்யூ கேட்ட ஆண்டர்சன்

நேற்றைய ஆட்டத்தில், ஆண்டர்சன் கோலிக்கு பந்து வீசினார். அப்போது, கோலி கால்களில் பந்து பட்டது. ஆண்டர்சன் நடுவரிடம் அவுட் கேட்டார். நடுவர் மறுக்கவே, ரிவ்யூவுக்கு சென்றது இங்கிலாந்து.

நடுவர் மீண்டும் மறுப்பு

நடுவர் மீண்டும் மறுப்பு

ரிவ்யூ முடிவில், பந்து அவுட்-சைட் ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே லேசாக சென்றதால், கள நடுவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாக மூன்றாவது நடுவர் தெரிவித்தார். கள நடுவராக இருந்த குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

கோபமடைந்த ஆண்டர்சன்

கோபமடைந்த ஆண்டர்சன்

இதை கண்ட ஆண்டர்சன் கோபமடைந்தார். பின் நடுவரிடம் இருந்து தன் தொப்பி மற்றும் உடைகளை வேகமாக பிடுங்கினார் ஆண்டர்சன். அதோடு, நடுவரிடம் கோபமாக பேசியுள்ளார். விக்கெட் கொடுக்க மறுத்ததற்கு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஆண்டர்சனுக்கு தண்டனை

ஆண்டர்சனுக்கு தண்டனை

இந்த செயல், ஐசிசி விதிகள் படி தவறானது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக 15 சதவீத சம்பளம் மற்றும் ஒரு தடைப் புள்ளி பெற்றார் ஆண்டர்சன். ஆண்டர்சன் இதை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு இதில் விசாரணை நடக்காது.

Story first published: Sunday, September 9, 2018, 17:25 [IST]
Other articles published on Sep 9, 2018
English summary
Anderson fined for dissent with the Umpire after review failed against Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X