For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

38 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் 900 புள்ளிகள்.. இங்கிலாந்தின் ஆண்டர்சன் புதிய சாதனை

Recommended Video

தரவரிசையில் 900 புள்ளிகள்...ஆண்டர்சன் புதிய சாதனை- வீடியோ

லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளை பெற்ற முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இச்சாதனையை செய்யும் ஏழாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

 Anderson reaches 900 points in bowler ratings

இங்கிலாந்து அணி லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டியில் ஆண்டர்சன் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 19 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்தமாக 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக தென்னாபிரிக்க அணியின் காஹிசோ ரபாடா (882 புள்ளிகள்) உள்ளார்.

இங்கிலாந்து அணியில் கடைசியாக இயன் போத்தம் கடந்த 1980 ஆம் ஆண்டு 911 புள்ளிகளை பெற்றார். அதன் பின்னர் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டர்சன் 900+ புள்ளிகளை பெற்றுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் 900 மற்றும் அதற்கு மேல் புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து வீரர்கள் விவரம்:

சிட்னி பார்ன்ஸ் (932)

ஜார்ஜ் லொஹ்மான் (931)

டோனி லாக் (912)

இயன் போத்தம் (911)

டெரெக் உண்டெர்வுட்(907)

அலெக் பேட்சர் (903)

ஜேம்ஸ் ஆண்டர்சன் (903)*

Story first published: Tuesday, August 14, 2018, 9:17 [IST]
Other articles published on Aug 14, 2018
English summary
Anderson reaches 900 points in.bowler ratings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X