For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு உயர்த்த அடுத்த வாரமே அதிரடி திட்டங்கள்.. அனில் கும்ப்ளே ஆயத்தம்

By Veera Kumar

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில்கும்ப்ளே, அணியை மேம்படுத்தும் அதிரடி திட்டத்தோடு களமிறங்கியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில் ஜூனியர் அணி நிர்வாகம், தேசிய கிரிக்கெட் அகாடமி பயி்சியாளர்கள், டெஸ்ட், ஒன்டே கேப்டன்கள் என அனைத்து தரப்பினருடனும் ஒரே நேரத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான், அனில் கும்ப்ளே.

ஆலோசனை

ஆலோசனை

பதவியேற்ற கையோடு, தனது வருங்கால திட்டங்களை செயல்படுத்த களமிறங்கியுள்ளார். இதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் ஆலோசனை கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

பயிற்சியில் வீரர்கள்

பயிற்சியில் வீரர்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி தற்போது பெங்களூருவில் பயிற்சி எடுத்து வருகிறது. எனவே அங்கேயே ஆலோசனை கூட்டத்திற்கு கும்ப்ளே அழைப்புவிடுத்துள்ளார்.

பல தரப்புக்கும் அழைப்பு

பல தரப்புக்கும் அழைப்பு

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, ஒன்டே அணி கேப்டன் டோணி, ஜூனியர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்கள் என பல தரப்பட்டோரையும் ஆலோசனைக்கு அழைத்துள்ளார் அனில் கும்ப்ளே.

எதிர்கால நலன்

எதிர்கால நலன்

ஆலோசனையின்போது, அனைத்து தரப்பும் தங்களது கருத்துக்களை கூறுமாறு கும்ப்ளே கேட்டுக்கொள்ள உள்ளார். இந்திய அணிக்கு வந்த பிறகுதான் அணி வீரர்களை மேம்படுத்த வேண்டும் என்ற வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது கும்ப்ளே அணுகுமுறை. ஜூனியர் வீரர்கள், மாநில வீரர்களையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும், அதுதான் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு நல்லது என கும்ப்ளே நினைக்கிறார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

தனி ஒரு பயிற்சியாளரால் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது என உணர்ந்துள்ள கும்ப்ளே, அனைத்து தரப்பு ஆலோசனையை கேட்டு, புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களை இளம் வயது முதல் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தும் பாணியில் கும்ப்ளேயின் திட்டங்கள் இருக்கப்போகிறது என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தில்.

Story first published: Monday, July 4, 2016, 16:43 [IST]
Other articles published on Jul 4, 2016
English summary
Anil Kumble called for a meeting on Sunday with Rahul Dravid, India U-19 coach, National Cricket Academy (NCA) coaches, Test captain Virat Kohli and limited-overs’ skipper MS Dhoni in Bangalore on the sidelines of the ongoing camp.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X