For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் வேணாம்..! எல்லாத்தையும் புடிச்சு வெளியே தள்ளுங்க..! இவரை தேர்வுக் குழு தலைவராக்குங்க..!!

டெல்லி: இப்போது இருக்கும் தேர்வுக்குழு தலைவரை நீக்கிவிட்டு, ஜாம்பவான் கும்ப்ளேவை தலைவராக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சேவாக் வலியுறுத்தி இருக்கிறார்.

அனில் கும்ப்ளே 2016 மற்றும் 2017 க்கு இடையில் இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்ற பின், அந்த பொறுப்பில் இருந்து ரா பின்னர் அந்தப் பதிவியிலிருந்து விலகினார்.

கோலியுடன் ஏற்பட்ட சண்டை தான் அதற்கு காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக உள்ளே வந்தார். தற்போது அவர் பதவி காலம் முடிந்தும் நீட்டிப்பு பெற்றார். தற்போது பயிற்சியாளராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வெளியில் வந்த குறைகள்

வெளியில் வந்த குறைகள்

இந்திய அணியானது உலக கோப்பையில் தோற்றுவிட்டது. கடும் விமர்சனங்கள் எழுந்தன. மிடில் ஆர்டரில் ஏற்பட்ட குழப்பம், தோனியின் செயல்பாடு என குறைகள் வெளியில் வந்தன. அதற்கு காரணம், அணியின் தேர்வுக்குழுவே என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

மொத்தம் 13 போட்டிகள்

மொத்தம் 13 போட்டிகள்

தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரது தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு எம்எஸ்கே பிரசாத் பதில் கொடுத்துவிட்டார்.

கும்ப்ளே சரியானவர்

கும்ப்ளே சரியானவர்

இந்நிலையில் அனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக வேண்டும் என்று சேவாக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ப்ளே பொருத்தமான நபர்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

கும்ப்ளே, சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர்களுடன் ஒரு வீரராகவும், இளைஞர்களிடம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின்போது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

 ஊதியம் அதிகம் வேண்டும்

ஊதியம் அதிகம் வேண்டும்

அப்போது, கேப்டனாக இருந்த கும்ப்ளே என்னுடைய அறைக்கு வந்து, அடுத்த 2 தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்றார். இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிலை அளிக்க கூடியவர். அவர் இப்போது தேவை. அதே நேரத்தில் அவர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, August 21, 2019, 21:59 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Anil kumble have to appoint as selection board president says former player virender sehwag.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X