'கடவுள்' அறைக்கு அவரைத் தேடி வந்த கடவுள்...!

Posted By:

மும்பை: பாரதரத்னா விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிரதமரிடமிருந்து தனக்கு தகவல் வந்ததும் தான் பேச்சற்றுப் போனதாகவும், கடவுள் இங்கே நம்முடன் நமது அறையில் இருக்கிறார் என்று தனது மனைவி அஞ்சலியிடம் சந்தோஷமாக கூறியதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு ரொம்ப காலமாகவே பாரதரத்னா விருது தர வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தன. ஆனால் விளையாட்டு வீரருக்கு தர விதிமுறைகள் தடையாக இருந்தன.

இருந்தாலும் சச்சினுக்கு வசதியாக அந்த விதியையே மாற்றியது இந்திய அரசு. இந்த நிலையி்ல் சச்சின் தனது கடைசி போட்டியை ஆடி முடித்து விடைபெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பாரதரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.

விருது தகவல் வந்தபோது...

விருது தகவல் வந்தபோது...

விருது குறித்த தகவல் தன்னை வந்தடைந்தபோது தான் எப்படி அதை ரியாக்ட் செய்தேன் என்பதை சச்சினே விளக்கியுள்ளார்.

பேச்சற்றுப் போனேன்

பேச்சற்றுப் போனேன்

பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு போன் வந்தது. பிரதமரே என்னிடம் பேசினார். நான் பாரதரத்னா விருதுக்குத் தேர்வு பெற்றிருப்பதாக அவர் கூறி வாழ்த்தியபோது நான் பேச்சற்றுப் போனேன்.

கடவுள் இங்கே இருக்கிறார்

கடவுள் இங்கே இருக்கிறார்

அப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய மனைவியும் அருகில் இருந்தார். போனை வைத்த நான், அஞ்சலி கடவுள் இங்கே இந்த அறையில் நம்முடன் இருக்கிறார் என்று கூறி செய்தியைத் தெரிவித்தேன்.

துள்ளிக் குதித்த அஞ்சலி

துள்ளிக் குதித்த அஞ்சலி

அதைக் கேட்டதும் எனது மனைவி, உற்சாகத்திலும், சந்தோஷத்திலும் அப்படியே துள்ளிக்குதித்தார் என்று கூறியுள்ளார் சச்சின்.

Story first published: Tuesday, November 19, 2013, 12:34 [IST]
Other articles published on Nov 19, 2013

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற