தோனிக்கு பேட்டிங் தெரியுமா? அசால்டாக எண்ணிய நார்ட்ஜேவுக்கு நறுக்கென்று பதிலடி.. 2010ல் நடந்த சம்பவம்

அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியுமா என நினைத்ததாக ஆண்ட்ரிக் நார்ட்ஜே தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அயல்நாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டு அணிகளுக்காகவும், மற்ற நாடுகளின் டி20 தொடரிலும் பங்கேற்று வருகின்றனர்.

இந்திய அணியின்

இன்னும் சிலர் வீடுகளில் இருந்துகொண்டு சமூக வலைதளங்களங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க வீரர் ஆன்ரிக் நார்ட்ஜே ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

நார்ட்ஜே

நார்ட்ஜே

தென்னாப்பிரிக்க அணி வீரரான ஆண்ட்ரிக் நார்ட்ஜே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணி இறுதிப்போடி வரை செல்வதற்கு நார்ட்ஜே முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசனில் அவர் 22 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசியது குறித்து பகிர்ந்துள்ளார்.

தோனி

தோனி

அப்போது எனக்கு வயது 16 தான் இருக்கும். சிறு வயது என்பதால் யாரை பார்த்தும் எனக்கு பயம் இல்லை. அப்போது தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசினேன். உண்மையை கூற வேண்டும் என்றால் அவருக்கு பேட்டிங் செய்ய தெரியுமா என்று நான் நினைத்தேன். அவர் குறித்து எனக்கு அப்போது சரியாக தெரியவில்லை. சுற்றி நின்றவர்கள் தோனி குறித்து பெருமையாக பேசி வருகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.

 எளிமையான குணம்

எளிமையான குணம்

நான் வீசிய முதல் சில பந்துகளை தோனி அதிரடியாக விளாசினார். ஆனால் அவர் ஒரு இன்ச் கூட நகரவில்லை, நின்ற இடத்தில் இருந்தே விளாசினார். அவர் மிகவும் எளிமையான மனிதர். அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகினார். அதன் பின்னர் தான் தோனி யாரென்று உணர்ந்தேன்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி மிக முக்கியமானவர் ஆவார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி, இந்த சீசனிலும் சிறப்பான முறையில் அணியை வழநடத்தி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South african Player Anrich Nortje Remember his 2010 Champions League Incident that he Thought MS Dhoni Didn't Know How to Bat
Story first published: Tuesday, June 8, 2021, 17:59 [IST]
Other articles published on Jun 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X