18 வருடம் கழித்து நடந்த அந்த சம்பவம்.. சாம்பியன் இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. ஆஷஸ் தொடரை வென்றது!

Watch Video : Australia won Ashes 2019 series

மான்செஸ்டர் : 2019 ஆஷஸ் தொடரை கைப்பற்றி சாதித்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

50 ஓவர் உலகக்கோப்பை வென்ற கையோடு அதே அளவு முக்கியத்துவம் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து,தொடரில் மண்ணைக் கவ்வியது. ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை 2 - 1 என கைப்பற்றியது.

முதல் மூன்று டெஸ்ட்

முதல் மூன்று டெஸ்ட்

2௦19 ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தன. ஒரு போட்டி டிரா ஆகி இருந்தது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் தொடர் 1 - 1 என சமநிலையில் இருந்தது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

பிர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் வெற்றிக்கு காரணம் ஆனார்.

இரண்டாவது டெஸ்ட் டிரா

இரண்டாவது டெஸ்ட் டிரா

லண்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைகளுக்கு நடுவே நடைபெற்றது. அதனால், அந்தப் போட்டி டிரா ஆனது. ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் சற்றே தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியின் போது தலையில் காயமடைந்து மூளை அழற்சி காரணமாக ஒரு இன்னிங்க்ஸ்-க்கு பின் ஓய்வில் சென்றார்.

மூன்றாவது டெஸ்ட் டிரா

மூன்றாவது டெஸ்ட் டிரா

மூன்றாவது டெஸ்ட்டில் தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை தன் அதிரடி பேட்டிங்கால் இங்கிலாந்து அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் பென் ஸ்டோக்ஸ். இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது என்பதே உண்மை.

நான்காவது டெஸ்ட்

நான்காவது டெஸ்ட்

மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் மீண்டும் ஆட அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் கடந்து 211 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 497 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 301 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 186 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

கடைசி இன்னிங்க்ஸ்

கடைசி இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இங்கிலாந்து அணி தட்டுத் தடுமாறி 197 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. வாழ்வா, சாவா என்ற நிலையில் நடந்த கடைசி இன்னிங்க்ஸில் டென்லி மட்டுமே அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை தக்க வைத்தது.

18 ஆண்டுகள் கழித்து வெற்றி

18 ஆண்டுகள் கழித்து வெற்றி

கடைசியாக 2001இல் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் வென்று இருந்தது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் வாஹ் தலைமையில் அப்போது வெற்றி பெற்று இருந்தது. 18 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் தொடரில் டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ashes 2019 : Australia won Ashes 2019 series after won the 4th test of the series. Australia won Ashes in England after 18 years. Steve Smith is the only difference says England Captain Joe Root.
Story first published: Monday, September 9, 2019, 9:42 [IST]
Other articles published on Sep 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X