For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆறு மாசம் முன்னாடியே ஸ்கெட்ச் போடும் பெங்களூர் அணி.. 2வது பயிற்சியாளர் நியமனம்

Recommended Video

பெங்களூர் அணிக்கு 2வது பயிற்சியாளர் நியமனம்- வீடியோ

பெங்களூர் : ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அனில் இரண்டாவது பயிற்சியாளராக நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் முன்பு கேரி கிர்ஸ்டன் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, நெஹ்ரா மற்றும் கிர்ஸ்டன், இருவரும் இணைந்து பயிற்சி அணியாக செயல்படுவார்கள் என கூறியுள்ளது பெங்களூர் அணி நிர்வாகம்.

Ashish Nehra appointed as RCB coach along with Gary Kirsten

பெங்களூர் அணி சென்ற ஐபிஎல்-இல் ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அடுத்த ஆண்டாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டம் போட்டு வருகிறது பெங்களூர் அணி.

சில வாரங்கள் முன்பு, டேனியல் வெட்டோரி உள்ளிட்ட மூன்று பயிற்சியாளர்களை நீக்கியது பெங்களூர் அணி. தொடர்ந்து கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக நியமித்தனர். சென்ற ஆண்டு பந்துவீச்சு ஆலோசகராக இருந்த நெஹ்ரா தற்போது பயிற்சியாளர் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் பதினோரு சீசனில் இதுவரை ஒரு முறை கூட பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதிலும் சென்ற முறை கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம் போன்ற நட்சத்திர வீரர்களை வைத்து இருந்தும், பெங்களூர் அணியால் ப்ளே-ஆப் கூட முன்னேற முடியவில்லை.

பெங்களூர் அணி நிர்வாகம் கூறுகையில், நெஹ்ராவை பயிற்சி அளிக்கும் அணியில் சேர்த்துக் கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நெஹ்ரா, கேரி இருவரும் இணைந்து கேப்டனுக்கு உதவியாக இருப்பார்கள்" என கூறியுள்ளது. மேலும், ஏ.பி.டிவில்லியர்ஸ் அணியில் அடுத்த ஆண்டு இடம் பெறுவார் எனவும் உறுதியாக கூறியுள்ளது.

Story first published: Wednesday, September 5, 2018, 18:25 [IST]
Other articles published on Sep 5, 2018
English summary
Ashish Nehra appointed as RCB coach along with Gary Kirsten
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X