For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதெல்லாம் ஜெயிச்சுட்டு வந்து பேசணும்.. கேப்டன் கோலியின் சர்ச்சை பேச்சு.. முன்னாள் வீரர் விளாசல்!

டெல்லி : இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தியா கடைசியாக ஆடிய நியூசிலாந்து தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதற்கு முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

Recommended Video

Nehra slams Kohli’s statement during NZ ODI series

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

அதன் முடிவில் கேப்டன் விராட் கோலி டி20 உலகக்கோப்பை நடக்கும் வருடத்தில் ஒருநாள் போட்டிகள் எல்லாம் முக்கியம் இல்லை என பேசி இருந்தார்.

யுவராஜ் கேப்டனாகி இருக்கணும்.. ஆனா தோனி கேப்டன் ஆனார்.. அது மட்டுமில்லை.. யுவி தந்தை சரமாரி விளாசல்!யுவராஜ் கேப்டனாகி இருக்கணும்.. ஆனா தோனி கேப்டன் ஆனார்.. அது மட்டுமில்லை.. யுவி தந்தை சரமாரி விளாசல்!

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

அது அப்போது பெரும் சர்ச்சை ஆனது. பல முன்னாள் வீரர்களும் விராட் கோலி சொல்வது தவறு என கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், தற்போது சமூக வலைதள பேட்டி ஒன்றில் பேசிய ஆஷிஷ் நெஹ்ரா கோலியை விமர்சனம் செய்துள்ளார்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5 - 0 என முதலில் வெற்றி பெற்று அசத்தியது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணியை புகழ்ந்து பேசி இருந்தார். தாங்கள் ஓய்வில்லாமல் ஆடினாலும் கவனமாக ஆடுவதாக குறிப்பிட்டார்.

ஒருநாள் தொடர் தோல்வி

ஒருநாள் தொடர் தோல்வி

அதன் பின் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 0 - 3 என மிக மோசமாக தோல்வி அடைந்தது. அப்போது கேப்டனாக கோலி பொறுப்பாக பேசாமல், டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் ஆண்டில் ஒருநாள் போட்டி முக்கியம் இல்லை என்றார்.

பொறுப்பற்ற பேச்சு

பொறுப்பற்ற பேச்சு

ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்த நிலையில் விராட் கோலி அப்படி பேசியது பெரும் அதிர்ச்சி அளித்தது. பொறுப்பற்ற பேச்சாகவே அது பார்க்கப்பட்டது. பலரும் ஒருநாள் போட்டி முக்கியம் இல்லை என்றால் ஏன் இந்திய அணி அதில் ஆட வேண்டும் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி

ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி

இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமூக வலைதளத்தில் கிரிக்கெட் தொடர்பாக நடத்தி வரும் நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பேசினார். அவரிடம் விராட் கோலி பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வெற்றி பெற்று விட்டு பேசினால்..

வெற்றி பெற்று விட்டு பேசினால்..

அதற்கு பதில் அளித்த ஆஷிஷ் நெஹ்ரா, "நீங்கள் வெற்றி பெற்று விட்டு பேசினால் அது வேறு. இந்த வருடம் டி20க்கானது. 50 ஓவர் போட்டிகள் பற்றி கவலைப்பட மாட்டோம் என சொல்வதே தவறு." என வெற்றி பெறாமல் கோலி பேசியதை சுட்டி காட்டினார் நெஹ்ரா.

ஒப்புக் கொள்ள மாட்டேன்

ஒப்புக் கொள்ள மாட்டேன்

மேலும், "ஒருநாள் போட்டிகள் முக்கியம் இல்லை என்றால் ஏன் விளையாட செல்ல வேண்டும். நியூசிலாந்தில் அந்த ஒருநாள் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற முயலவில்லை என கூற வருகிறீர்களா?. நான் கோலியின் பேச்சை ஒப்புக் கொள்ள மாட்டேன்" எனவும் கூறினார் நெஹ்ரா.

விராட் கோலி கேப்டனாக..

விராட் கோலி கேப்டனாக..

மேலும், விராட் கோலி கேப்டனாக இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதே சமயம் ஒரு வீரராக அவரைப் பற்றி நாம் பேசவே வேண்டாம். அவரது செயல்பாடுகளே அதை சொல்லும் எனவும் கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.

Story first published: Thursday, May 7, 2020, 21:50 [IST]
Other articles published on May 7, 2020
English summary
Ashish Nehra slams Virat Kohli’s statement during NZ ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X