For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங், பவுலிங்கில் ஒரு பயலும் இல்லாட்டியும் கூட ஆல் ரவுண்டரில் நாமதான் பர்ஸ்ட்!

துபாய்: ஐசிசியின் டெஸ்ட் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆல் ரவுண்டர் பிரிவில் மட்டுமே இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது - அதாவது டாப் 10ல். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் டாப் 10 வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.

ஆல் ரவுண்டர் வரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்து சற்று ஆறுதல் தேடிக் கொடுத்துள்ளார்.

பேட்ஸ்மேன்களில் இலங்கையின் குமார சங்கக்கரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல பந்து வீச்சில், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

பேட்டிங்கில் உலக சாதனைகளைப் படைத்த பெருமை கொண்ட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கூட டாப் 10 வீரர்களில் இடம் பெறாதது ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

சங்கக்கரா நம்பர் ஒன் பேட்ஸ்மேன்

சங்கக்கரா நம்பர் ஒன் பேட்ஸ்மேன்

டெஸ்ட் பேட்ஸ்மேன் வரிசையில் இலங்கையின் சங்கக்கரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். காலே டெஸ்ட் போட்டியில் அவர் போட்ட இரட்டை சதம்தான் அவரை முதலிடத்திற்கு உயர்த்த முக்கியக் காரணம்.

அடுத்தடுத்து பெருமை

அடுத்தடுத்து பெருமை

சங்கக்கரா ஏற்கனவே ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆப் தி இயர் ஆகிய விருதுகளை 2012ல் பெற்றவர் ஆவார். முதலிடத்தில் இதுவரை இருந்து வந்த அப் டி வில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சங்கக்கரா.

287 நாட்கள் முதலிடத்தில் இருந்த வில்லியர்ஸ்

287 நாட்கள் முதலிடத்தில் இருந்த வில்லியர்ஸ்

அதேசமயம், 287 நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தவர் வில்லியர்ஸ் என்பது நினைவிருக்கலாம். இந்தக் கால கட்டத்தில் அவர் 33 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியிருந்தார்.

2012க்குப் பிறகு

2012க்குப் பிறகு

சங்கக்கரா இதற்கு முன்பு 2007ம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். அப்போது அவர் ரிக்கி பான்டிங்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். பின்னர் 2012ல் அந்தப் பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு தற்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சில் ஸ்டெயின் முதலிடம்

பந்து வீச்சில் ஸ்டெயின் முதலிடம்

பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவைக் காணோமே

இந்தியாவைக் காணோமே

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் டாப் 10 வீரர்களில் இந்தியர் எவருமே இல்லை. இது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் சமீப காலத்தில் சாதிக்கத் தவறியதே இந்த அவலத்திற்குக் காரணம்.

அஸ்வினுக்கு இடம்

அஸ்வினுக்கு இடம்

அதேசமயம், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பிலாண்டரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தால்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தால்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் இரு இன்னிங்ஸ்களிலும் சற்று சிறப்பாக ஆடியதே அவரை ஆல் ரவுண்டர் வரிசையில் முதலிடத்திற்குக் கொண்டு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 12, 2014, 16:47 [IST]
Other articles published on Aug 12, 2014
English summary
Former Sri Lankan captain Kumar Sangakkara has regained the number-one Test batting spot in the Reliance ICC Player Rankings for Test Batsmen while there was some good news for India as Ravichandran Ashwin moved to the top of the all-rounder's list. Ashwin has displaced South Africa's Vernon Philander as the number-one ranked all-rounder, while England's Stuart Broad has moved ahead of Australia's Mitchell Johnson in fourth position.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X