For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசியாவுக்கு வெளியே இதுதான் இந்தியாவின் "பிக்கஸ்ட்" வெற்றி!!

நார்த் சவுட், ஆன்டிகுவா: ஆசியாவுக்கு வெளியே இந்தியா இதுவரை பெற்றிராத வெற்றியை மேற்கு இந்தியத் தீவுகளில் வைத்து பெற்றுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பிரித்து மேய்ந்து விட்டனர் இந்திய வீரர்கள்.

கேப்டன் கோஹ்லியின் இரட்டை சதம், ஷிகர் தவான் உள்ளிட்டோரின் சப்போர்ட்டிங் ஆட்டம் மற்றும் ஆர். அஸ்வினின் அதிரடி ஆல்ரவுண்ட் ஆட்டம் எல்லாம் சேர்ந்து இந்திய அணிக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது.

இதுவரை ஆசிய நாடுகளுக்குள்ளேதான் இந்தியா பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முதல் முறையாக ஆசியாவுக்கு வெளியே அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்று புதிய வரலாறு படைத்து விட்டது.

அதிரடி அஸ்வின்

அதிரடி அஸ்வின்

அஸ்வின்தான் இந்தப் போட்டியை சிறப்பாக முடித்து வைக்க முக்கியக் காரணம். பாலோ ஆன் வாங்கி 2வது இன்னிங்ஸை ஆடி வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது உள்ளே புயலெனப் புகுந்த அஸ்வின் அந்த அணியை 8 விக்கெட் இழப்புக்கு 132 என்ற மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டார்.

போராடிப் பார்த்த பிராத்வெயிட் - பிஷு

போராடிப் பார்த்த பிராத்வெயிட் - பிஷு

கடைசிக் கட்டத்தில் கார்லஸ் பிராத்வெயிட் (51 நாட் அவுட்), தேவேந்திர பிஷு (45) ஆகியோர் போராடிப் பார்த்தனர். இவர்களைப் பிரிக்க பலரும் முயன்றும் முடியவில்லை. கடைசியில் அஸ்வின்தான் இந்த ஜோடியை விலக்கி விட்டு "விக்டரி"யைத் தட்டிப் பறித்தார்.

ஆசியாவுக்கு வெளியே முதல்

ஆசியாவுக்கு வெளியே முதல்

அஸ்வின் ஆசியாவுக்கு வெளியே முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை அவர் மொத்தம் 17 முறை 5 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ்கள்

முதல் இன்னிங்ஸ்கள்

இந்திய அணி முன்னதாக தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் வாங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை முடக்கிப் போட்ட பெருமை வேகப் பந்து வீச்சுக்குப் போய்ச் சேர் வேண்டும். உமேஷ் யாதவும், சமியும் தலா 4 விக்கெட்களைச் சாய்த்தனர்.

2வது இன்னிங்ஸ் நாயகன் அஸ்வின்

2வது இன்னிங்ஸ் நாயகன் அஸ்வின்

ஆனால் 2வது இன்னிங்ஸின் நாயகனாக அஸ்வின் தனி ஒருவனாக உருவெடுத்தார். அடுத்தடுத்து அதிரடியாக விக்கெட்களைச் சாய்த்த அவர் 7 விக்கெட்களை முறித்துப் போட்டு மேற்கு இந்தியத் தீவுகளை முழுமையாக முடக்கி விட்டார்.

சந்திரிகா - சாமுவேல்ஸ் அதிரடி

சந்திரிகா - சாமுவேல்ஸ் அதிரடி

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நிலையை வலுப்படுத்த ராஜேந்திர சந்திரிகா (31), மார்லன் சாமுவேல்ஸ் (50) ஜோடி முயன்றது. ஆனால் அஸ்வின் இவர்களைப் பிரித்து விட்டார்.

கோஹ்லி பிடித்த செம கேட்ச்

கோஹ்லி பிடித்த செம கேட்ச்

அடுத்த ஓவரிலேயே ஜெர்மைன் பிளாக்வுட்டை காலி செய்தார் அஸ்வின். அவரது விக்கெட்டை கேப்டன் கோஹ்லி அழகாக டைவ் அடித்துப் பிடித்து அசத்தினார். பிளாக்வுட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

42வது ஓவரில் சாமுவேல்ஸுக்கு நாக் அவுட்

42வது ஓவரில் சாமுவேல்ஸுக்கு நாக் அவுட்

அடுத்து 42வது ஓவரில் அஸ்வின் போட்ட பந்து அட்டகாசமாக சாமுவேல்ஸ் பேட்டைத் தொட்டு ஆப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. சாமுவேல்ஸ் ஷாக் ஆகி விட்டார்.

மொத்தத்தில் யாரையும் சுதாரிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்து இந்திய அணியினர் அசத்தலான வெற்றியைப் பெற்று விட்டனர்.

Story first published: Monday, July 25, 2016, 10:20 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
India have notched a very big victory outside Asia for the first time after beating WI by an innings and 92 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X