ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு புது பொறுப்பு.. பார்த்தீவ் பட்டேல் சொன்ன தகவல்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு புது பொறுப்பு வழங்கப்படலாம் என்று பார்த்தீவ் பட்டேல தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை. ஃபார்மில் இல்லாத கோலிக்கு பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்மாதம் இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு முடிஞ்சிது.. 3 வீரருக்கு வாய்ப்பு - ரோகித் திட்டம்.. உலககோப்பை கனவு காலிஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு முடிஞ்சிது.. 3 வீரருக்கு வாய்ப்பு - ரோகித் திட்டம்.. உலககோப்பை கனவு காலி

காயம்

காயம்

இந்த நிலையில், இடுப்பில் அறுவை சிகிச்சை, கொரோனா தொற்று என அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வரும் ராகுல், முழ உடல் தகுதியை பெற 2 வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆசிய கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது உடல் தகுதியை பார்த்து தான் முடிவு செய்யப்படும் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் அளித்துள்ள பேட்டியில், கேஎல் ராகுல் இல்லாததால் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என மாற்றி வருகிறார்கள். இதனால் ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் அனுபவம்

ஐபிஎல் அனுபவம்

விராட் கோலிக்கு தொடக்க வீரராக களமிறங்குவது ஒன்றும் புதிது அல்ல. அவர் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி இருக்கிறார். இதனால் அவருக்கு அனுபவம் இருக்கிறது. விராட் கோலியை ஃபார்ம் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி இந்த மாற்றத்தை செய்யும் என நம்பிகிறேன்.

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால், நடுவரிசையில் சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா,தினேஷ் கார்த்திக், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Asia cup 2022 – Parthiv patel feels virat kohli will be given new role ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு புது பொறுப்பு.. பார்த்தீவ் பட்டேல் சொன்ன தகவல்
Story first published: Friday, August 5, 2022, 17:00 [IST]
Other articles published on Aug 5, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X