For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற ஹர்திக்.. சரிவை சந்தித்த சூர்யகுமார்.. டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

T20 World Cup தொடருக்கான இந்திய அணியில் 13 வீரர்கள் உறுதி? *Cricket

இதில் ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதே போன்று பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

இதில் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 17 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் அடித்தார்.

ஆசிய கோப்பை: வெறும் 45 செஷன்தான்.. விராட் கோலி மனநிலையில் பெரும் மாற்றம்.. யார் இந்த பேடி அப்டன்?ஆசிய கோப்பை: வெறும் 45 செஷன்தான்.. விராட் கோலி மனநிலையில் பெரும் மாற்றம்.. யார் இந்த பேடி அப்டன்?

ஹர்திக் முன்னேற்றம்

ஹர்திக் முன்னேற்றம்

இதேபோன்று பந்துவீச்சில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் தற்போது ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா 8 இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் .

 ஆப்கான் வீரர்கள்

ஆப்கான் வீரர்கள்

இதை போன்று பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ரஷித் கான் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டப்ரைஸ் ஷாம்ஷி மற்றும் ஜாஸ் ஹாலிவுட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் முதல்முறையாக டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.

சூர்யகுமார் சரிவு

சூர்யகுமார் சரிவு

தற்போது முஜிபுர் ரஹ்மான் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து 8வது இடத்தில் நீடிக்கிறார்.இதனிடையே டி20 போட்டிகள் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிராக 18 ரன்களில் ஆட்டமிழக்க அவர் ஒரு இடம் சரிந்து தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தற்போது ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பென்ஸ்டோக்ஸ் முன்னேற்றம் கண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விலாசிய ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் 18-வது இடத்திலும் பந்துவீச்சில் 38வது இடத்திலும் முன்னேறி உள்ளார்.

Story first published: Wednesday, August 31, 2022, 19:23 [IST]
Other articles published on Aug 31, 2022
English summary
Asia cup 2022 Performance of Hardik Pandya made rise in ICC t20i Rankings ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற ஹர்திக்.. சரிவை சந்தித்த சூர்யகுமார்.. டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X