For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை ஸ்பெஷல் - பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் 5 சாதனை.. வேற லெவல் ரெக்கார்ட்

சென்னை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 28அம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டியை காண, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து உளளனர்.

இந்த நிலையில், இந்தியா, தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்த வேளையில், இந்திய கிரிக்கெட் அணி படைத்த 5 சாதனைகளை தற்போது பார்க்கலாம்.

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி தொடரை வெல்வது என்பது எல்லாம் மற்ற அணிகளுக்கு பகல் கனவாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2 முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை கூட ஆஸ்திரேலியாவில் கைப்பற்றவில்லை.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் 13 முறை மோதி உள்ளன. இதில் 12 முறை இந்தியாவும், ஒரு முறை பாகிஸ்தானும் வென்றுள்ளது. அதுவும் கடந்த 29 ஆண்டுகளாக 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை ஒருமுறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை.

அதிக முறை நாக் அவுட்

அதிக முறை நாக் அவுட்

இதே போன்று 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி அதிக முறை நாக் அவுட் சுற்றுக்கு சென்றுள்ளது. 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது தான் முதல் முறையாக இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு சென்ற நிலையில், இந்திய அணி இதுவரை 26 முறை நாக் அவுட்டில் விளையாடி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் 18 முறை தான் நாக் அவுட்டில் களமிறங்கி இருக்கிறது.

டெஸ்ட் வெற்றி

டெஸ்ட் வெற்றி

சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இதுவரை 112 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுவும், 2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்தியா தனது சொந்த மண்ணில் தோற்றது இல்லை. மாறாக பாகிஸ்தான் இதுவரை 60 போட்டியில் தான் சொந்த மண்ணில் வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்கு பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள், தற்போது தான் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

அதிக முறை 200

அதிக முறை 200

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை 200 ரன்களுக்கு மேல் 21 முறை அடித்துள்ளது. இதன் மூலம் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணி சாதனையை படைத்திருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் அந்த அணி 10 முறை மட்டும் தான் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் வெற்றியில் பாகிஸ்தான் தான் முன்னிலையில் இருந்தாலும், இந்தியாவின் இந்த சாதனையை தகர்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

Story first published: Sunday, August 14, 2022, 17:08 [IST]
Other articles published on Aug 14, 2022
English summary
Asia cup special – 5 Records of Indian team may not beat by Pakistan ஆசிய கோப்பை ஸ்பெஷல் - பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் 5 சாதனை.. வேற லெவல் ரெக்கார்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X