For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் ஓரங்கட்டப்பட்ட வீரர்.. அதிவேக சதம் விளாசி அசத்தல்.. தவறு செய்த ஆர்சிபி அணி

லாகூர்: ஐபிஎல் தொடரிலிருந்து கழற்றிவிடப்பட்ட வீரர் ஒருவர், தற்போது அதிவேக சாதனை விளாசி அசத்தியுள்ளார். இதனை கண்டதும் ஐபிஎல் அணிகள் தப்பு பண்ணியாச்சு என்ற ஃபிலிங்கில் உள்ளனர்.

உலகின் சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் தற்போது மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சில நட்சத்திர வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டிவ் ஸ்மித், லாபஸ்சேங், இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஆகியோரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

ஐபிஎல் -ல் இருந்து வெளியேறுவோர்க்கு ஆப்பு.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. பிசிசிஐ புது திட்டம்ஐபிஎல் -ல் இருந்து வெளியேறுவோர்க்கு ஆப்பு.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. பிசிசிஐ புது திட்டம்

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

இந்த நிலையில், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் லாகூரில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வார்னர், கம்மின்ஸ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹேட் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். கேப்டன் ஆரோன் பிஞ்ச், பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 23 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹேட் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

டிராவிஸ் ஹேட் சதம்

டிராவிஸ் ஹேட் சதம்

9 பவுண்டரி, 1 சிக்சர் என்று விளாசிய டிராவிஸ் ஹேட், 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து அதிரடியை காட்டி ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் நம்ம ஊர் விலைவாசி போல் உயர்ந்தது. இதனால் டிராவிஸ் ஹேட் 70 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

வருத்தத்தில் ஆர்சிபி

வருத்தத்தில் ஆர்சிபி

டிராவிஸ் ஹேட் அதிரடி வீரராக அறியப்பட்டாலும் , அவரை ஐபிஎல் அணிகள் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் ஓரங்கட்டிவிட்டது. குறிப்பாக 2016 மற்றும் 17வது சீசனில் பெங்களூரு அணிக்காக 10 போட்டியில் விளையாடிய டிராவிஸ் ஹேட் 205 ரன்களை அடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு டிராவிஸ் ஹேட் எந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடவில்லை. தற்போது அவர் அதிவேக சதம் அடித்ததும், தப்பு பண்ணியாச்சே என்ற ஃபிலிங்கில் அணி நிர்வாகம் உள்ளது,

Story first published: Tuesday, March 29, 2022, 18:42 [IST]
Other articles published on Mar 29, 2022
English summary
Aus vs Pak 1st odi – Travis Head fastest century Leaves IPL Teams disappointed ஐபிஎல் தொடரில் ஓரங்கட்டப்பட்ட வீரர்.. அதிவேக சதம் விளாசி அசத்தல்.. தவறு செய்த ஆர்சிபி அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X