For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஸ்மித்.. கெத்து காட்டிய சந்தர்பால் மகன்.. ஆஸி.க்கு தக்க பதிலடி

பெர்த் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேங் ஆகியோர் இரட்டை சதம் விளாசி அசத்தினர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிவ்நரைன் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.. இது தான் கடைசி தொடர் என அறிவிப்பு.. காரணம் ? டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் வார்னர்.. இது தான் கடைசி தொடர் என அறிவிப்பு.. காரணம் ?

அடுத்தடுத்து இரட்டை சதம்

அடுத்தடுத்து இரட்டை சதம்

தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர், ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க, உஸ்மான் கவாஜா அரை சதம் கடந்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்செங் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி பொறுப்பாக ரன் சேர்த்து அடுத்தடுத்து சதம் விளாசியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். சிறப்பாக விளையாடிய மார்னஸ் லாபஸ்செங், 204 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்மித் இரட்டை சதம் விளாசினார்.

598 ரன்கள் குவிப்பு

598 ரன்கள் குவிப்பு

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதம் விளாசி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹேட் பொறுப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 598 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் எப்படி விளையாட போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தந்தை ஆறடி பாய்ந்தால் மகன் 12 அடி பாய்வார் என்பதை நிரூபித்து விட்டார் தேஜ்நரைன் சந்தர்பால். ஷிவ்நரைன் சந்தர்பால் போலவே களத்தில் நங்கூரம் பாய்ந்து எந்த பந்தை வேண்டுமானாலும் போடு அதை நான் அடிப்பேன் என்ற பாணியில் விளையாடினார். அவரை ஆட்டம் இழக்க வைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

பதிலடி

பதிலடி

தேஜ்நரைன் சந்தர்பால் 73 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். கேப்டன் கிரேம் பிராத்வைட் களத்தில் இருக்கிறார். தற்போது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ ஆனை தவிர்த்தாலே ஆட்டம் டிராவை நோக்கி போக அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, December 1, 2022, 16:51 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
Aus vs WI 1st test 2022 - steve smith equals Don bradman record and Tagenarine chanderpaul shines
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X