For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க ரெடி… 17 பேருடன் தயாராக காத்திருக்கும் ஆஸ்திரேலியா..! காரணம் இது தான்..!!

Recommended Video

17 பேருடன் தயாராக காத்திருக்கும் ஆஸ்திரேலியா | அதுக்குள்ள இந்த முடிவை எடுத்த பாக். இளம் வீரர்

கேன்பரா: பாரம்பரியம்மிக்க ஆஷஸ் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக கோப்பை சாம்பயின் என்ற உத்வேகத்தில், உற்சாகத்தில் இருக்கும் இங்கிலாந்து, ஆஷஸ் தொடரை எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு உலக கோப்பையை விட முக்கிய தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத் தான்.

ஆஷஸ் தொடரானது, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கான முக்கிய தொடர். இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர் என்பதால் போட்டி உலக கோப்பையை விட இந்த தொடர் ஆக்ரோஷமாக இருக்கும்.

ஆக. 1 முதல் ஆஷஸ்

ஆக. 1 முதல் ஆஷஸ்

வரும் 1ம் தேதி முதல் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. அதற்காக 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூவர் கூட்டணியான ஸ்மித் மற்றும் வார்னருடன் தடை செய்யப் பட்ட பான்கிராப்ட்டுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

கேரி ஏன் இல்லை?

கேரி ஏன் இல்லை?

உலக கோப்பையில் அசத்தலாக ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

மேத்யூவுக்கு வாய்ப்பில்லை

மேத்யூவுக்கு வாய்ப்பில்லை

கேப்டன் டிம் பெய்னே விக்கெட் கீப்பர் தான் என்ற போதிலும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மேத்யூக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. ஹேண்ட்ஸ்கம்ப்பிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அணியில் இல்லை

அணியில் இல்லை

அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்சன் பேர்ட், கிறிஸ் ட்ரெமெய்ன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரும் தேர்வுக்குப் பரிசீலிக்கப் படவில்லை. அதே போல் ஸ்பின்னர் ஜோன் ஹாலண்டும் தேர்வாக வில்லை. மாறாக லபுஷேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பான்கிராப்ட், வார்னர், ஸ்மித், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லாபஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், பாட்டின்சன், பீட்டர் சிடில், மைக்கேல் நேசெர்.

Story first published: Saturday, July 27, 2019, 8:37 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
Australia cricket team announced for ashes series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X