ஜூனியர் உலக கோப்பை சாம்பியன் இந்தியா! பைனலில் ஆஸி.யை வீழ்த்தி 4வது முறையாக அபாரம்

Posted By:

வெலிங்டன்:ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. பைனலுக்கு முன்னேறிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பைனலில் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது. கடைசி 33 ரன்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

அபார பந்து வீச்சு

அபார பந்து வீச்சு

ஆஸ்திரேலிய தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜொனாதன் மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அந்த அணி கேப்டன் ஜேசன் சங்கா 13 ரன்களில் வெளியேறினார். இந்திய தரப்பில் இஷான் பொரேல் சிவ சிங், கம்லேஷ் நகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிவம் மாவி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

கணிசமான ரன்

கணிசமான ரன்

இதையடுத்து 217 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது இந்திய அணி. கேப்டன் பிரித்வி ஷா 29, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய சுபம் கில் 31 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

சதம் விளாசிய மனோஜ்

சதம் விளாசிய மனோஜ்

இருப்பினும் மறுமுனையில், இடதுகை ஓபனிங் பேட்ஸ்மேன் மனோஜ் கல்ரா நங்கூரம் போட்டு நின்று சதம் விளாசினார். விக்கெட் கீப்பர் ஹார்விக் தேசாய் அவருக்கு கை கொடுத்து 47 ரன்களுடன் களத்தில் நின்றார். 38.5 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

நான்காவது முறையாக சாதனை

நான்காவது முறையாக சாதனை

ஆஸ்திரேலியா தரப்பில் வில் சுதர்லேன்ட் மற்றும் பரம் உப்பல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்திய ஜூனியர் அணி 4வது முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த அணிக்கு, முன்னாள் ஜாம்பவான், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 3, 2018, 10:16 [IST]
Other articles published on Feb 3, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற