
யார் இந்த கேமரூன் கிரீன்?
அந்த வகையில் நடப்பாண்டியில் அனைத்து அணியின் ரசிகர்களும் ஒரு வீரரை தங்கள் அணி வாங்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அவர் யாரென்றால் ஆஸ்திரேலிய இளம் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் தான். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்று அனைத்திலும் ஆஸ்திரேலிய அணிக்காக அசத்தி வருகிறார். இதனால் அடுத்த மாதம் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால், கேமரூன் கிரீன் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது.

கேமரூன் கிரீன் பேட்டி
ஆனால் ஆஷஸ் டெஸ்ட் தொடர் காரணமாக ஏராளமான ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து கேமரூன் கிரீன் கூறுகையில், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளேன். இது என்ன நிரூபிக்க மிகச்சிறந்த வாய்ப்பு. சிறந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் ஐபிஎல் தொடரில் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் உள்ள அனைத்து உயர் ரக தொழில்நுட்பம் ஐபிஎல் கிரிக்கெட்டில் உள்ளது.

யாருக்கு அதிக வாய்ப்பு?
கிரிக்கெட்டை அறிந்து கொள்ளவும், கற்று கொள்ளவும் ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த களம் என்று தெரிவித்துள்ளார். சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகம் பணம் வைத்துள்ள அணிகளான ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் கேமரூன் கிரீனை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கர்ரனை வாங்கவும் பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஐபிஎல் ஏலம்
டிசம்பர் மாதம் இறுதியில் பெங்களூருவில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சில வாரங்களுக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்களது அணியால் ரீ டெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதனால் எந்த அணி நிர்வாகம், எந்த வீரரை வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.