For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பந்துகளில் 4 விக்கெட்கள்.. பாகிஸ்தானை சுருட்டிய ஆஸ்திரேலிய வீரர்

அபுதாபி : ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது,

முதல் டெஸ்டை போராடி டிரா செய்தது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது.

இரண்டாம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஆறே பந்துகளில் வெளியே அனுப்பினார் நாதன் லியோன்.

பாகிஸ்தான் பேட்டிங் சரிவு

பாகிஸ்தான் பேட்டிங் சரிவு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. துவக்க வீரர் முகமது ஹபீசை ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த நான்கு வீரர்களை வெளியே அனுப்பினர் நாதன் லியோன். அதுவும் அவர் ஆறு பந்துகள் இடைவெளியில் 4 விக்கெட்கள் எடுத்தார். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 22 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்தது.

6 பந்துகளில் நான்கு விக்கெட்கள்

6 பந்துகளில் நான்கு விக்கெட்கள்

19.5வது பந்தில் அசார் அலி, 19.6வது பந்தில் ஹாரிஸ் சோஹைல்-ஐ வெளியேற்றினார் லியோன். 21வது ஓவரை ஹாலண்ட் மெய்டனாக வீசினார். 22வது ஓவரில் மீண்டும் பந்து வீசிய லியோன் 21.2வது பந்தில் ஷபிக் மற்றும் 21.4வது பந்தில் பாபர் ஆசம் ஆகியோரை வெளியேற்றி இந்த சாதனையை செய்தார்.

நான்காம் இடத்தில் லியோன்

நான்காம் இடத்தில் லியோன்

இது மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார் நாதன் லியோன். 313 விக்கெட்கள் எடுத்துள்ள மிட்செல் ஜான்சன் மற்றும் 310 விக்கெட்கள் எடுத்துள்ள ப்ரெட் லீ ஆகியோரை முந்தி நாதன் லியோன் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நான்கு விக்கெட்களோடு நாதன் லியோன் 314 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

முதல் மூன்று இடங்கள்

முதல் மூன்று இடங்கள்

ஆஸ்திரேலியாவில் முதல் மூன்று இடங்களை ஷேன் வார்னே (708), க்ளென் மெக்கிராத் (563) மற்றும் டென்னிஸ் லில்லீ (355) ஆகியோர் உள்ளனர். நாதன் லியோன் மூன்றாம் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Tuesday, October 16, 2018, 18:16 [IST]
Other articles published on Oct 16, 2018
English summary
Australian spinner nathan Lyon strikes with 4 Wickets against pakistan in 6 balls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X